அதானி, மணிப்பூர் விவகாரம்! எதிர்க்கட்சிகள் முழக்கம்.. 4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
டெல்லி: அதானி மற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே, எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பவே, 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
அதானி மீது ஏற்கெனவே ஹிண்டன்பர்க் பெரிய குற்றச்சாட்டை வைத்திருந்தது. போலியான நிறுவனங்கள் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பை ஏற்றி காட்டி, அதனை விற்பனை செய்து ஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை அதானி அடித்திருக்கிறார் என்று விமர்சித்திருந்தது. இதற்கு அதானி குழுமம் மறுக்க, பதிலுக்கு ஆதாரங்களுடன் இதே குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் மீண்டும் வைத்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. ஆனால், விசாரணையின் முடிவில் அதானி மீது குற்றம் இல்லை என்று கூறப்பட்டுவிட்டது.

மறுபுறம் அமெரிக்க நீதிமன்றம் அதானியை பிடிக்க வாரண்ட் பிறப்பித்திருந்தது. காரணம், சோலார் பவர் விவகாரத்தில் அவர் ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்திருக்கிறார் என்பதுதான். இந்த வழக்கை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, நாட்டில் சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். ஆனால் ஆயிரம் கோடி கணக்கில் முறைகேடு செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் சுதந்திரமாக வெளியில் திரிந்துக்கொண்டிருக்கிறார். அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எழுப்பப்படும் என்று கூறியிருந்தார். அதேபோல எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த 3 நாட்களாக இந்த பிரச்னை எழுப்பப்பட்டு வருகிறது. இதனல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. இன்று 4வது நாளாக இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருந்தன. அதானி குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications