Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்றரை மணி நேரத்திற்கு பின்.. எதிர்க்கட்சிகள் சென்ற பின்.. மணிப்பூர் பற்றி பேசிய மோடி.. பரபர கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசாமல் மற்ற விஷயங்கள் பற்றி பேசியது, பாகிஸ்தான் பற்றி எல்லாம் கூட பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து அவையை விட்டு வெளியேறின. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தவுடன் பிரதமர் மோடி மணி மணிப்பூர் குறித்து பேசி விளக்கம் அளித்தார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

Opposition upset as PM Modi did not mention about Manipur in his 1 hour speech in Lok Sabha today

இதையடுத்து ஒருவழியாக இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுத்தார். அவர் தனது பேச்சில், எங்கள் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கு நன்றி. நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கானது அல்ல, எதிர்க்கட்சிகளுக்கானது. கடவுள் மிகவும் அன்பானவர், அவர் கொடுத்த சமிக்கைதான் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் . இது கடவுளின் ஆசீர்வாதம் என்று நான் நம்புகிறேன்.

2018 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் இப்படித்தான் நடந்தது. அதற்கு அடுத்த நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்தனர். வரும் 2024 தேர்தலிலும் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும். நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் எப்போதுமே எங்களுக்கு ராசியானதுதான்.

2024 தேர்தலில் இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று புதிய ரெக்கார்ட் படைப்போம். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்ற பட்டியலே எதிர்க்கட்சி தலைவரிடம் இல்லை. இந்த முறை விவாதத்தை தொடங்க எதிர்க்கட்சி தலைவருக்கே நேரம் அளிக்கவில்லை. கூடுதலாக கொடுக்கப்பட்ட நேரத்தை காங்கிரஸ் கட்சியினர் வீணடித்துவிட்டனர்.

இந்த தீர்மானத்தில் பேசப்பட்ட அம்சங்கள் ஆச்சர்யமானவை, நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மணிப்பூர் மோதலால் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி உள்ளன. 3 நாட்களாக விவாதங்களை கவனித்து வருகிறேன்.

பாஜக ஆட்சியில் முக்கியமான பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்திய நாட்டின் இளைஞர்களை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை . நாங்கள் சதம் அடித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் 'நோ பால்' போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருமுறை 'நோ பால்' போட்டால் பரவாயில்லை, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப 'நோ பால்' போடுகிறார்கள். எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு எதிரானது அல்ல, என்னை அவைக்கு வரவைக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அது நோ-பால் ஆகிவிட்டது. எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி மீது அக்கறை இல்லை: அதிகாரத்தின் மீதே ஆசை.

எல்லா தருணங்களிலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகத்தைதான் செய்திருக்கிறது. எவற்றில் எல்லாம் அரசியல் செய்யக் கூடாதோ அவற்றில் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. நாட்டின் வளர்ச்சியில் நமது கவனம் இருக்க வேண்டும். இதுதான் காலத்தின் தேவை. கனவுகளை நனவாக்கும் சக்தி நமது இளைஞர்களுக்கு உண்டு. ஊழலற்ற ஆட்சியை நாங்கள் வழங்கி உள்ளோம்.

இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததால் தான், எங்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்கள். அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் மேலே கொண்டு வந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் வசையே எனக்கு டானிக். எதிர்கட்சிகளின் விமர்சனம் எனக்கு வலிமையை தருகிறது. வெளிநாட்டிலிருந்து நிபுணர்களை அழைத்துவந்து என்னென்னமோ சொல்ல வைத்தார்கள் எதிர்கட்சியினர். வங்கி துறை முடங்கிவிடும் என்றார்கள், ஆனால் இன்று வங்கிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகின்றன:.

கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள் விமர்சனம் செய்வதில் மிக கீழ் தரமான நிலையை எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன. எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை, வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் என்னையே குறி வைத்து அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் பொழியும் அவதூறுகள் எனக்கு டானிக் போல உள்ளன. அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வருகிறோம்.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும். கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது. இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை. இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆஸ்ட்ரிச் மன நிலையில் இருக்கிறார்கள். தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தங்கள் தலையை மறைத்துக் கொள்வதன் மூலம் தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

2028ம் ஆண்டும் எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும். நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்ததில்லை என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதையடுத்து மணிப்பூர் பற்றி பேசுங்கள் மணிப்பூர் பற்றி பேசுங்கள் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டு வந்தனர்.

மணிப்பூர் பற்றி பேச்சு: நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசாமல் மற்ற விஷயங்கள் பற்றி பேசியது, பாகிஸ்தான் பற்றி எல்லாம் கூட பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து அவையை விட்டு வெளியேறின. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தவுடன் பிரதமர் மோடி மணி மணிப்பூர் குறித்து பேசி விளக்கம் அளித்தார்.

எதிர்க்கட்சிகள் வெளியேறும் வரை பிரதமர் மோடி காத்திருந்து பின்னர் மணிப்பூர் குறித்து பேசினார். மணிப்பூரில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும். மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம், மணிப்பூரில் அமைதி திரும்ப அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அங்கே விரைவில் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு அமைதி திரும்பும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+