எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவீங்க? திரிணாமுல் எம்பியை லெப்ட் ரைட் வாங்கிய ராஜ்யசபா தலைவர்!
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சி நிகழ்வை முன்வைத்து நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது தம்மை நோக்கி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆவேசமாக பேசியதால் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் கொதித்து போய், என்ன தைரியம் இருந்தா இப்படி என்னை நோக்கி பேசுவீங்க? உங்களுடைய நடத்தை இந்த சபையில் ரொம்ப அசிங்கமாக இருக்கு.. அடுத்த முறை உங்களை வெளியே அனுப்பிவிடுவேன் என எச்சரித்தார். இதனையடுத்து ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தியர்கள் இப்போது அதிகமாக பேசும் பெயர் வினேஷ் போகட்.. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வினேஷ் போகட் பதக்கம் வெல்வது உறுதி என ஒட்டுமொத்த தேசமும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. ஆனால் வினேஷ் போகட் உடல் எடையை காரணம்காட்டி அதுவும் வெறும் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததை முன்வைத்து பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்கிற பேரிடி இந்தியர்கள் மீது விழுந்தது. இதனால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்தது. இன்னமும் இந்தியர்களால் இதை ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது.

வினேஷ் போகட்டுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. இந்திய ஜனாதிபதி முதல் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் வினேஷ் போகட்டுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குமுறலுடன் உரத்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் வினேஷ் போகட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு சபைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. மேலும், எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.. அவர்களுக்கு மட்டும்தான் இதயம் இருக்கிறது.. ரத்தம் வழிகிறது என.. ஒட்டுமொத்த தேசமும் அந்த பெண்ணுக்காக வேதனைப்படுகிறது.. ஒவ்வொருவரும் துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.. ஆனால் இதனை அரசியலாக்கக் கூடாது.. அந்த பெண்ணுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றார் ஜெகதீப் தன்கர்.
அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால் கொதித்துப் போன அவர், என்ன தைரியம் இருந்தால் ராஜ்யசபா தலைவர் இருக்கையை நோக்கி இப்படி பேசுவீர்கள்? உங்களுடைய நடத்தை இந்த சபையில் மிகவும் அசிங்கமானதாக இருக்கிறது.. இன்னொரு முறை இப்படி நிகழ்ந்தால் வெளியே அனுப்பிவிடுவேன் என எச்சரித்தார்.
இந்த களேபரங்களைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications