குடியரசுத் தலைவரை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகன்! ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் வட இந்தியர் தோற்றத்தில்!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத், அவருக்கு வீரமங்கை வேலுநாச்சியார் படத்தை பரிசாக அளித்திருக்கிறார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக் கூறிய ஓ.பி.ரவீந்தர நாத், அந்தச் சந்திப்பின் தனது தந்தைக்கு ஜெயலலிதா வழங்கிய முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியில் இருந்தால் அதிமுக கட்சி கரைவேட்டி கட்டுவதை பெரும்பாலும் தவிர்த்து, வட இந்தியர்கள் தோற்றத்திலேயே வலம் வரக் கூடியவர் ரவீந்தரநாத் என்பது கவனிக்கத்தக்கது.

ஓபிஎஸ் மகன்
அதிமுகவுக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கன்னு என்று கூறும் அளவுக்கு ஒரே ஒரு எம்.பியாக இருக்கக் கூடியவர் ரவீந்தரநாத். ஆனால் இவரை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் அதன் மீது சபாநாயகர் ஓம் பிர்லா இதுவரை எந்த முடிவும் எடுக்காததை வைத்து பார்க்கும் போது மத்திய ஆட்சி மேலிடத்தின் பரிபூரண ஆசி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்துக்கு இருப்பதாகவே கருதப்படுகிறது.
Recommended Video

டெல்லியில் லாபி
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்குவதாக அறிவித்தது முதல் டெல்லியில் முகாமிட்டு தனது தந்தைக்காக அரசியல் லாபி செய்து வருகிறார் ரவீந்தரநாத். இவரது அரசியல் லாபி ஓரளவு ஒர்க் அவுட் ஆகிறது என்று கூட சொல்லலாம். இதனிடையே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த ரவீந்தரநாத், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

வீர மங்கை வேலு நாச்சியார்
மேலும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரமங்கை வேலு நாச்சியாரின் படத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் ரவீந்தர நாத் எம்.பி. அதிமுக கட்சி கரை வேட்டியை தவிர்த்துவிட்டு வட இந்தியர் தோற்றத்தில் ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவை அணிந்துக் கொண்டு ஜனாதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார் ரவீந்தர நாத்.

எடப்பாடி தரப்புக்கு மெசேஜ்
பிரதமர் மோடியுடன் ஒன்றாக பேசிக்கொண்டே நடந்து செல்வது, குடியரசுத் தலைவருடன் அமர்ந்து பேசுவது போன்ற படங்களை வெளியிடுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஏதோ ஸ்ட்ராங் மெசேஜ் ஒன்றை கூற வருகிறார் ரவிந்திரநாத் என்பது மட்டும் நமக்கு புரிகிறது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications