Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்டிகல் இல்யூஷன்: சூரிய காந்தி தோட்டத்தில் ஒரு 'பட்டாம் பூச்சி'.. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி தோட்டத்துக்குள் நரி, கரடி, பறவைகள் மற்றும் விலங்குகளோடு ஒரு பட்டாம் பூச்சியும் இருக்கிறது. இந்த பட்டாம்பூச்சியை 60 நொடிக்குள் நீங்கள் கண்டுபிடித்தால் ஜீனியஸ் தான் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு படத்தை முதலில் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும்.. சற்று கூர்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும் என்பதே...

இதைவிட மிக எளிதாக கூற வேண்டும் என்றால் காணல் நீரை குறிப்பிடலாம். நாம் சாலையில் தூரத்தில் பார்க்கும் போது முதலில் தண்ணீர் இருப்பது போல் தோன்றும்.. ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும் அங்கு தண்ணீர் இல்லை என்று.

ஆப்டிகல் படம்

ஆப்டிகல் படம்

அது போல தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களும். முதலில் பார்ப்பதற்கு ஒரு விதமாகவும்.. உன்னிப்பாக பார்க்கும் போது வேறு விதமாகவும் இருக்கும். முதலில் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளோ அல்லது பறவைகளோ நம் கண்களுக்கு வெளிப்படையாக தெரியாத வகையில் இருப்பதனால் இந்த படங்களுக்கு ஆப்டிகல் இல்யூஷன் என்று பெயர். இதனால் இது போன்ற படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

அறிவுத்திறனை சோதிக்கும்

அறிவுத்திறனை சோதிக்கும்

சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் கண்களை குழுப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் அதிகம்பேர் இத்தகைய படங்களுக்கு விடையளிக்க விரும்புகின்றனர். இந்த படத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை கண்டுபிடிப்பவர்கள் தன் நண்பர் அல்லது உறவினர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்க அவர்களுக்கும் பரப்பி அவர்களது அறிவுத்திறனை சோதித்து பார்ப்பர்.

அழகான பட்டாம்பூச்சி

அழகான பட்டாம்பூச்சி

அந்த வகையில் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தில் சூரிய காந்தி தோட்டம் ஒன்று இருக்கிறது. அதில் ஏராளமான சூரிய காந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதற்கிடையில் நரி, கரடி போன்ற சில விலங்குகளும்.. பறவைகளும் இருக்கின்றன. இதற்கு மத்தியில் தான் ஒரு அழகான பட்டாம்பூச்சியும் இருக்கிறது. இந்த பட்டாம்பூச்சியை கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால் ஆகும்.

100 பேரில் ஒருவராலேயே

100 பேரில் ஒருவராலேயே

ஆனால் இந்த படத்தை பதிவிட்டவர் 100 பேரில் ஒருவராலேயே இந்த பட்டாம்பூச்சியை கண்டுபிடிக்க முடிந்ததாகவும்... நிறைய பேர் கண்டுபிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் சவால் மிகுந்த இந்த படத்தில் இருக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிப்பது மிக கடினம் என்பதால் 1 நிமிடம் டைம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி 60 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் கூட நீங்க ஜீனியஸ் தான்.

எங்கேயுமே பட்டாம் பூச்சி இல்லையே?

எங்கேயுமே பட்டாம் பூச்சி இல்லையே?

சரி ஒரு நிமிடம் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தில் இருக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிக்க முடிகிறதா.. கண்டுபிடித்தால் சூப்பர்.. நீங்கள் அதிக அறிவுத்தின்றன் கொண்டவர்தான்.. உங்களுக்கு கழுகுக்கண் பார்வைதான்... ஆனால் படத்தில் எங்கேயுமே பட்டாம் பூச்சி இல்லையே என்று கூறுபவர்கள் கூடுதலாக இன்னும் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் உற்று தேடி பாருங்கள்... பட்டாம்பூச்சி எங்கு இருக்கிறது என்று தெரியும்...

படத்தின் இடப்புறம் மேல் பகுதியில்..

படத்தின் இடப்புறம் மேல் பகுதியில்..

அப்படியும் தெரியவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரு டிப்ஸ்.. பட்டாம் பூச்சியும் சூரிய காந்தியின் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கிறது.. இப்போது முயற்சித்து பாருங்கள்.. கண்டுபிடித்திருப்பீர்கள் என நினைக்கிறோம். அப்படியும் தெரியவில்லை என்றால் படம் முழுவதும் தேடாமல்... படத்தின் இடப்புறம் மேல் பகுதியில் மட்டும் உற்று கவனியுங்கள்.. எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

சற்று சிரமம் தான்

சற்று சிரமம் தான்

சற்று சவால் மிக்க படம் என்பதால் பட்டாம்பூச்சியை கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான்.. எனினும் கொடுக்கப்பட்ட இரு டிப்ஸ்களை வைத்து பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் தெரியவில்லை என்றால் மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பட்டாம்பூச்சி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+