படத்தை பாருங்க.. பூனையை கண்டுபிடிச்சா நீங்க தான் மேதை.. அதுவும் 13 செகண்டுல.. ஜாலியா ஒரு விளையாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் என்று சொல்லப்படுகிற ஒரு புகைப்படத்தில் மறைந்துள்ள பூனையை 13 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதி புத்திசாலிதான்.

என்னதான் நவீன ஸ்மார்ட் உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும், நம்மைப் பற்றியும் நமது குணநலன்கள் பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.

எனவே, இப்படி குணாதிசயங்கள் மற்றும் அறிவுக்கூர்மையை கணிக்ககூடிய ஆப்டிகல் இல்யூஷன் போன்ற படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

 ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

நமது கண்களை குழப்பி, மூளையை கலங்கடிக்கும் இத்தகைய ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் தற்போது பல இடங்களில் தேர்வுகளாக கூட வைக்கப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருந்து விட்டு ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளத்தில் உலவும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றும் புதிர் விளையாட்டுகள் இணைய உலகில் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. மாயத்தோற்ற படங்களை பார்த்த உடனேயே அதனுள் ஒளிந்துள்ள விடையை நாம் தேட தொடங்கி விடுகிறோம்.

 கண்டுபிடித்தால் அதி புத்திசாலிதான்

கண்டுபிடித்தால் அதி புத்திசாலிதான்

இப்படி நமது அறிவுக்கூர்மையை சோதிக்கும் வகையிலான ஒரு இல்யூஷன் படம் தான் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரு பூனை ஒளிந்து இருக்கிறது. இதை உங்களால் 13 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் அதி புத்திசாலிதான் போங்க.... ஆனால், 13 நொடிகளுக்குள் இங்கு பதுங்கியிருக்கும் பூனையை கண்டுபிடித்தவர்கள் வெறும் 1 சதவீதம் மட்டுமே. அந்த ஒரு சதவீத்தத்திற்குள் நீங்கள் வருகிறீர்களா என்று பார்க்கலாம்...

 பூனையை கண்டுபிடிக்க முடிகிறதா?

பூனையை கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த படத்தை 13 நொடிகள் உற்று பாருங்கள்.. பூனையை கண்டுபிடிக்க முடிகிறதா..? முடியவில்லை என்றால் பரவாயில்லை... கீழே கொடுக்கும் டிப்ஸை வைத்து எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நமது கண்ணுக்கு உடனே புலப்படுவது படத்தில் அதிகம் இலைகள் இல்லாத பழமையான மரமும் அதன் முன்னே நிற்கும் ஒரு நாயும் தான். மேலோட்டமாக ஒருமுறை பார்க்கும் யாராலும் பூனையை கண்டுபிடித்துவிட முடியாது என்றே உறுதியாக சொல்லலாம். மிகவும் சாமர்த்தியமாக யோசிக்கக் கூடிய நபர்களால் மட்டுமே இங்கு ஒளிந்து இருக்கும் பூனையை கண்டுபிடிக்க முடியும். உங்கள் கண்ணுக்கு பூனை தெரிகிறதா? இல்லையா...

 இரண்டு டிப்ஸ்

இரண்டு டிப்ஸ்

டிப்ஸ் 1; பூனை நாய்க்கு பின்னால் ஒளிந்து இருக்கவில்லை. எனவே நீங்கள் அந்த எண்ணத்தில் தேடிக்கொண்டு இருந்தால் 13 நொடிகள் அல்ல.. 13 நிமிடங்கள் ஆனாலும் கண்டுபிடிக்க முடியாது
டிபிஸ் 2; இமேஜின் அடிப்பகுதியில் எங்கும் பூனை இல்லை. எனவே அங்கு தேடுவதையும் விட்டு விடுங்கள்.. முழு படத்தையும் மீண்டும் ஒருமுறை தெளிவாக பாருங்கள்.... இப்போது உங்களால் பூனையை கண்டுபிடித்துவிடலாம். இன்னமும் உங்களால் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா... இப்போது ஒரு முக்கியமான டிப்ஸ் தர்றோம்..

 மரத்தின் கிளைகளை பாருங்கள்

மரத்தின் கிளைகளை பாருங்கள்

இதுல எப்படியும் உங்களால கண்டுபிடிக்க முடியும்.. மரத்தின் மேலே உள்ள கிளைகளை பாருங்கள்.. இப்போது அதில் உங்களுக்கு ஏதேனும் ஒன்று கண்டிப்பாக தெரிய வாய்ப்பு உள்ளது. இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையா.. குழப்பம் வேண்டாம்... பூனை எங்கு மறைந்து இருக்கிறது என நாங்களே தெளிவுபடுத்தி விடுகிறோம். இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே பூனையை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியவர்களே.. உங்களின் பார்வைத்திறன் அபாரமானதாக உள்ளது என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்( சும்மா ஜாலிக்காக)... மூளையை கசக்கி பிழியும் வகையில் இருந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வெகுவாகவே ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+