இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி.. ஜனநாயகம் செத்துபோய்விட்டது.. பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் ஆக்ரோஷமான ராகுல்
டெல்லி: மத்திய பாஜக அரசால் இந்தியாவில் ஜனநாயகம் மரணித்துவிட்டது. ஆர்எஸ்எஸ்ஸை எதிர்ப்பது தான் என் வேலை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி டெல்லியில் ஆக்ரோஷமாக பேசினார்.
Recommended Video
மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைக்கு தீர்வு காணவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவததோடு, ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளனர்.

டெல்லியில் போராட்டம்
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்லம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக போராட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீசார் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதனை மீறி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி பேட்டி
இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று ராகுல்காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். இந்த வேளையில் ராகுல்காந்தி கூறியதாவது:

ஜனநாயகம் இறந்துவிட்டது
நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், நாட்டில் நடக்கும் வன்முறை குறித்த கேள்வி எழுப்ப முடியாத நிலை உள்ளது. இன்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றத்தில் பேசவும், போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். நமது நாடு சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளது. ஜனநாயகம் இறந்துவிட்டது.

எதிர்த்தால் கைது
நாட்டில் உள்ள 4 முதல் 5 பேரின் நலனை காப்பது தான் மத்திய அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது. இந்த சர்வாதிகார அரசு என்பது 2 நபர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டு வருகிறோம். ஒரு நூற்றாண்டாக செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா கண்முன்னே அழிந்து வருகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிராக நிற்கும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்குதல் மட்டுமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆர்எஸ்எஸ்ஸை எதிர்ப்பது தான் வேலை
இந்தியாவில் சுதந்திரமாக செயல்படக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை. இதனை தொடர்ந்து செய்ய போகிறேன். ஆர்எஸ்எஸ்ஸை எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறேனோ அவ்வளவு கடுமையாக தாக்கப்படுவேன். ஆர்எஸ்எஸ்ஸை எதிர்ப்பதன் மூலம் என் மீது தாக்குதல் நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications