டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் நமது உணவு வீரர்கள்....போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா

விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நமது உணவு வீரர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் நமது உணவு வீரர்கள். விவசாயிகளின் அச்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். விவசாயிகளின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் டெல்லியிலும் மாநில எல்லைகளில் உள்ள சாலைகளில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது. கடும் குளிர் நிலலவுகிறது. இதையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Our farmers are India’s Food Soldiers Priyankachopra tweets

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. விவசாயிகள் போராட்டம் 12 நாட்களாக தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் நாளை பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"விவசாயிகள் நமது உணவு வீரர்கள். விவசாயிகளின் அச்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரைத்துறை பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

English summary
Actress Priyanka Chopra tweets and support to farmers protest, Our farmers are India’s Food Soldiers. Their fears need to be allayed. Their hopes need to be met. As a thriving democracy, we must ensure that this crises is resolved sooner than later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X