சிறந்த சேவை.. தமிழக காவல்துறையைச் சேர்ந்த 18 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு!
புதுடெல்லி: சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு நாள் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும்.

ஜனாதிபதி பதக்கம்
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் 88 பேருக்கு, வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கம் 189 பேருக்கு, சிறந்த சேவை பணிக்கான காவல் விருது 662 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பதக்கம்
சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், சென்னை டிராபிக் போலீஸ் ஏசிபி பிரதீப்குமார், தமிழ்நாடு கியூ பிரிவின் எஸ்.பி கண்ணம்மாள், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்ட 18 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அதிகாரிகள்
இதில், தமிழகத்தை சேர்ந்த 20 காவல்துறை அதிகாரிகளுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கத்தை தமிழக கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜி.வெங்கட்ராமன் மற்றும் தஞ்சாவூர் சிஜடி- ஐஜி சி.சிவநருள் பெறுகிறார்கள்.

குடியரசு தினம்
நாளை நடைபெறவிருக்கும் 73-வது குடியரசு தின விழாவில், ஜனாதிபதி இந்தியா முழுவதும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள வழங்கி கவுரவிப்பார். வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கப் பட்டியலில் தமிழக காவல்துறையினரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications