என்ன சொல்றீங்க.. தமிழகத்தில் 3.2 லட்சம் டீலர்கள்.. ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி கட்டலையா! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மத்திய பாஜக அரசு அமைந்த பிறகு, தனியார் துறையினர் நாட்டில் எளிமையாகத் தொழில் செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்பு, நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வரி முறை இருந்து வந்தது.

இது தொழில்துறையினருக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாக இருந்தது. இதன் காரணமாகக் கடந்த 2010ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 ஒரு ரூயாய் கூட

ஒரு ரூயாய் கூட

ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜிஎஸ்டி தொகை, அதற்கு முந்தைய ஆண்டை விடத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசும் தொடர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டீலர்கள் செலுத்திய ஜிஎஸ்டி தொகை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வணிக வரித் துறையில் பதிவு செய்துள்ள சுமார் 30% டீலர்கள், அதாவது 3.26 லட்சம் பேர் ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை.

ஆய்வு

ஆய்வு

மேலும், சுமார் 1.94 லட்சம் டீலர்கள் கடந்த ஆண்டில் ரூ.1,000க்கும் குறைவாகவே ஜிஎஸ்டி செலுத்தியுள்ளனர். tax remittances துறை அண்மையில் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 11 லட்சம் பதிவு செய்யப்பட்ட டீலர்கள் உள்ளனர். அவர்களில் 6.72 லட்சம் பேர் மாநில அதிகார வரம்பிலும், மீதமுள்ளவர்கள் மத்திய அரசின் அதிகார வரம்பிலும் உள்ளனர்.

 களைய நடவடிக்கை

களைய நடவடிக்கை

சரக்குகளைக் கையாளும் நிறுவனங்கள் ₹40 லட்சத்திற்கு மேலும், சேவையில் ஈடுபடுபவர்கள் ₹20 லட்சத்திற்கு மேல் தொழில் செய்தால் இந்த வரம்பிற்குள் வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி கலெக்ஷன் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வசூல் 15.83% அதிகரித்துள்ளது. இருப்பினும், வரி வசூல் நெறிமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, அவற்றைக் கண்டறிந்து களையவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 வளர்ச்சி குறைவு

வளர்ச்சி குறைவு

ஜிஎஸ்டி வருவாய் வசூல் மூன்று விஷயங்களைக் கொண்டது. மாநில ஜிஎஸ்டி (SGST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) மற்றும் தற்காலிக ஐஜிஎஸ்டி தீர்வு. ஜிஎஸ்டி வருவாய் வசூலைக் கணக்கிடும் முறையில் இழப்பீடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மேலும், கடந்த 6 மாதங்களில் மத்திய அரசு வெளியிட்ட மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் தரவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஆண்டு அதே மாதங்களை ஒப்பிடும்போது ஜிஎஸ்டி வரி வசூல் மந்தமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை தமிழகத்தை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

 நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த ஆய்வுக்குப் பின்னர், வணிக வரித்துறை சுமார் 5.2 லட்சம் டீலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜிஎஸ்டி செலுத்தாத டீலர்களின் அவர்களின் கணக்குகளைச் சரி பார்க்கக் கோரிக்கை விடுத்துள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு மே மாதத்தில் 22,430 டீலர்கள் சுமார் ₹64.22 கோடியை செலுத்தினர். தற்போதைய சூழலில் வரி செலுத்தாத நபர்களிடம் இருந்து வரியை வசூலிப்பதே தங்கள் நோக்கம் என்று இந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரி செலுத்தாத 5.2 லட்சம் டீலர்களும் வரி விலக்கு வரம்பிற்குள் மட்டுமே வணிகம் செய்துள்ளனர் என்று கூற முடியாது. குறிப்பாகச் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளீட்டு வரி வரவை பெறச் செலுத்துவது அவசியமாகிவிட்டது.

ஆக்ஷன்

ஆக்ஷன்

வணிக வரித்துறை மற்றொரு நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதில் மொத்த ஆண்டு வருவாய் ₹1.5 கோடி வரை உள்ள வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களில் 1 சதவீகி வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தவர்களைக் கண்காணிப்பதாகும். இத்திட்டத்தில் சுமார் 60,000 டீலர்கள் இணைந்துள்ளனர். இந்த டீலர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வியாபாரம் செய்கிறார்களா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும். அப்படி மொத்தம் 28 டீலர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

உயர்வு

உயர்வு

இதன் காரணமாக 1, 220 டீலர்கள் இந்தத் திட்டத்தில் இருந்து விலகி வழக்கமான டீலர்களாக பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் அவர்களிடம் இருந்து ₹84 லட்சம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, ஏப்ரல் 2022இல் வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 3.66 லட்சத்தை தொட்டது. கடந்த 2021இல் இது 3.33 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+