முஸ்லீம் மக்கள் தான் அதிகம்.. ஆனாலும் வென்ற பாஜக.. காரணம் ஓவைசி தான்! டேட்டாவை பாருங்க புரியும்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிடாமல் போனதே தோல்விக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல ஓவைசி கட்சியும் சில தொகுதிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த நிலையில், இப்போது நடந்த தேர்தலில் பாஜக வென்றுள்ளது. இதன் மூலம் 1998ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

என்ன காரணம்:
கெஜ்ரிவால் இந்த முறை படுதோல்வி அடைய என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். குறிப்பாக இந்த டெல்லி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து போட்டியிடவில்லை. மாறாக ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டது. இதுவே தோல்விக்குப் பிரதான காரணம் எனப் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அதான் ஓவைசி.
ஓவைசி:
அசாதுதீன் ஒவைசி தலைமையிலான மஜ்லீஸ் கட்சி டெல்லியில் போட்டியிட்டது. ஓவைசி கட்சி வேட்பாளர்கள் அங்கு இரு தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்கள் வெல்லவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றியாளரைத் தீர்மானித்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மஜ்லீஸ் கட்சி வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட்டனர். ஓக்லாவிலிருந்து ஷிஃபா உர் ரஹ்மான் கான் மற்றும் முஸ்தபாபாத்தில் இருந்து தாஹிர் ஹுசைன் ஆகியோர் போட்டியிட்டனர். இருவருமே 2020 டெல்லி கலவரத்துடன் தொடர்புடைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். இருப்பினும், அவர்கள் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஓக்லா தொகுதி:
ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அமனதுல்லா கான் 23,639 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மணீஷ் சவுத்ரி இரண்டாவது இடத்தையும், மஜ்லீஸ் கட்சியின் ஷிஃபா உர் ரஹ்மான் கான் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். காங்கிரஸ் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வென்ற போதிலும், வாக்கு வித்தியாசம் பெரியளவில் குறைய மஜ்லீஸ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளே முக்கிய காரணமாக இருந்தது.

முஸ்தபாபாத்
அடுத்து முஸ்தபாபாத் தொகுதி. இஸ்லாமியர்கள் சுமார் 40% வசிக்கும் இந்த பகுதியில் பாஜக வென்றது பலரும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. இந்த தொகுதியில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்த் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் அடீல் அகமது கான் 67,637 வாக்குகளும், மஜ்லீஸ் கட்சியின் தாஹிர் உசேன் 33,474 வாக்குகளும், காங்கிரஸின் அலி மெஹ்தி 11,763 வாக்குகளும் பெற்றனர். இங்கு எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்ததே பாஜக வெல்லக் காரணமாக இருந்தது.
டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜக 48ல் வென்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியால் 22 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் உட்பட இதர கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications