ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு.. அக்.3 வரை நீட்டித்து உத்தரவு
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சித்மபரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்ற பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
எனினும் தனது 74-ஆவது பிறந்தநாளின்போதும் அவர் சிறையிலேயே இருந்தது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் கடுமையாக பாதித்தது. இந்த நிலையில் அவரது 14 நாட்கள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ப. சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சிறை செல்ல நேரிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications