இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? டென்ஷன் ஆன ப.சிதம்பரம்.. ‘பாரத்’ இன்னும் அந்த நிலைக்கு போகலயே!
டெல்லி: டெல்லியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
டெல்லியில் இன்றும் நாளையும் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

ஜி20 மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு விருந்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேபினட் அந்தஸ்து உள்ள நிலையில், ஜனாதிபதி விருந்தில் அவருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேபினட் அந்தஸ்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, தலைவர்களுக்கான ஜனாதிபதி வழங்கும் விருந்து நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விருந்துக்கு அழைக்காதது, நாட்டின் பெரும்பான்மை மக்களை மதிக்காததற்கு சமம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று அளிக்கும் விருந்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை அரசாங்கம் அழைக்காததை எந்த ஜனநாயக நாட்டிலும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா, அதாவது 'பாரதம்', ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications