கூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப.சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    டெல்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப சிதம்பரத்தை நீதிபதி உட்கார சொன்னார்.ஆனால் உட்கார மறுத்து கூண்டிலேயே நின்றார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பிற்பகல் தொடங்கியது. நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் முன் இன்ற ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரம் புன்னகையுடன் நீதிபதி முன்பு ஆஜரானார்.

    P.Chidambarm stands in witness box, refuses to sit in cbi court

    ப. சிதம்பரத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார், சிபிஐ தரப்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார்.

    ப. சிதம்பரத்தை காவலில் 5 நாள் காவலில் எடுத்து எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்து சிபிஐ ஆவணங்களை சமர்ப்பித்தது.

    அப்போது சாட்சி கூண்டில் ஏறி நின்றபடியே இருந்த ப சிதம்பரத்தை நீதிபதி அஜய்குமார் குஹர் உட்காருமாறு சொன்னார். ஆனால் அவர் நின்று கொண்டே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து நின்றபடியே வழக்கறிஞர்களின் விவாதங்களை கவனித்தார்.

    முதலில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார். அதன்பின்னர் ப சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தனது விவாதங்களை சமர்பித்து வருகிறார். தற்போது பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+