மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 34 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
