காஷ்மீர் அட்டாக்.. எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பல்டி அடித்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா அசிஃப் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

பேட்டியில் அவர் பேசியதாவது, "பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விஷயம் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் குணமடையை விரும்புகிறோம். இந்தியாவில் நாகாலாந்து முதல் காஷ்மீர் வரையும், சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தெற்கு பகுதிகளிலும் மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் பார்த்தால் இது உள்ளூர் கிளர்ச்சியாக இருக்கலாம்.
கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என சிறுபான்மையினரை இந்துத்துவா சக்திகள் அடக்க முயற்சிக்கின்றன. எனவேதான் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எந்த சூழலிலும் எங்கும் நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
பெஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள ஏரி மிகவும் பேமஸானது. அதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அப்படித்தான் நூற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பைசாரன் பள்ளத்தாக்கிற்கு வந்திருக்கின்றனர். பெஹல்காம் பகுதியிலிருந்து இது சுமார் 6 கி.மீ தொலைவில் இருக்கிறது. பள்ளத்தாக்கு பகுதிக்கு வர கார், ஜீப் வசதிகள் கிடையாது. நடந்து அல்லது குதிரைகள் மூலமாகத்தான் வர வேண்டும்.
இப்படியான பகுதியில் திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 28 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தாக்குதல் நடந்த இடம் புள்வெளி பகுதி என்பதால் பொதுமக்களால் ஓடி ஒளியமுடியவில்லை. தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உதவுகிறது என்று பேச்சு அடிபட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications