ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் சரமாரி வான்வழித் தாக்குதல்-15 பேர் பலி-தலிபான்கள் எந்த நேரத்திலும் பதிலடி
டெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். இந்த தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் திடீரென நேற்று நள்ளிரவு முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.

பக்திகா மாகாணத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் 7 இடங்களில்
பாகிஸ்தானின் விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந்த வான்வழித் தாக்குதலில் பர்மால் மாவட்டத்தில் முர்க் பஜார் என்ற பகுதியே முழுமையாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலைக் கண்டித்து ஆப்கானை ஆளும் தலிபான்களின் பாதுகாப்பு அமைச்சகம், இத்தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என எச்சரித்துள்ளது. வஜிரிஸ்தானி அகதிகளை இலக்கு வைத்துதான் பாகிஸ்தான் தாக்குத்அல் நடத்தி இருக்கிறது; வஜிரிஸ்தான் அகதிகள் இறைமையுடன் சுய உரிமையுடன் தங்கள் நிலத்தில் வாழ உரிமை கொண்டவர்கள் என்றும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்மைகாலங்களில் பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு தருகிறது என்பதுதான் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. இந்த தலிபான்கள் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications