ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடரும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு- ராணுவம் கடும் பதிலடி!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஆத்திரமூட்டும் வகையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் நேற்றும் 8 எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடுகளுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி தந்தது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் படுகொலைத் தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதால் இந்தியா கடும் கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழையவும் தடை விதித்தது. இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் இந்த துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் ராணுவம் நடத்துகிறது. இதற்கு நமது ராணுவமும் தொடர்ந்து பதிலடி தந்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார், நவ்ஷாரா, சுந்தெர்பானி மற்றும் அக்னூர் ஆகிய எல்லைப் பகுதிகளில் நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஆத்திரமூட்டியது. இதற்கு நமது ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டுள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு












Click it and Unblock the Notifications