மன்மோகன் சிங்கின் சொந்த ஊர் இந்தியாவில் இல்லை.. பிரதமரான பின் பாகிஸ்தான் செய்த சுவாரசிய சர்ப்ரைஸ்
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவு என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மன்மோகன் சிங் நம் நாட்டு பிரதமராக பதவியேற்றவுடன் பாகிஸ்தானில் அவர் படித்த பள்ளிக்கு மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்பட்டது. தற்போதும் அந்த பள்ளி மன்மோகன் சிங் பெயரிலேயே இயங்கி வருகிறது.
நம் நாட்டில் 2 முறை பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர். சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நம் நாட்டின் மத்திய நிதி அமைச்சராக இருந்த பிறகு தான் பிரதமர் பதவியை எட்டிப்பிடித்தார்.

சரிவில் இருந்த நம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கிவிட்ட தலைவர்களில் மன்மோகன் சிங்கிற்கு முக்கிய பங்கு உள்ளது. மன்மோகன் சிங்கிற்கு 92 வயது நிரம்பியதால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தான் வயோதிகம் சார்ந்த உடல்நல பிரச்சனையால் நேற்று மன்மோகன் சிங் காலமானார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் மன்மோகன் சிங் நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு உள்பட அவரை பற்றிய பலருக்கும் தெரியாத பல்வேறு தகவல்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் நம்மை எதிரியாக பார்க்கும் பாகிஸ்தானே மன்மோகன் சிங்கை பெருமைப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானில் மன்மோகன் சிங் படித்த பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சிலருக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் பலருக்கும் இது புதிதாக இருக்கலாம்.
உண்மை என்னவென்றால் மன்மோகன் சிங் தனது பள்ளி படிப்பை பாகிஸ்தானில் தான் படித்தார். அதாவது மன்மோகன் சிங் கடந்த1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பஞ்சாப் மாகாணம் கா (Kah)பகுதியில் பிறந்தார். இவரது தந்தை பெயர் குர்முக் சிங் கோலி, தாய் பெயர் அம்ரித் கவுர். மன்மோகன் சிங் தனது தாயை சிறுவயதிலேயே இழந்தார். அதன்பிறகு தந்தை வழி பாட்டி ஜம்னா தேவி கட்டுப்பாட்டில் தான் மன்மோகன் சிங் வளர்ந்தார்.
அப்போது பாகிஸ்தான் என்ற நாடே இல்லை. தற்போதைய பாகிஸ்தான் பகுதிகள் அனைத்தும் நம் நாட்டின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த இந்தியாவாக தான் இருந்தது. இதனால் மன்மோகன் சிங் தனது பள்ளிப்படிப்பை கா கிராமத்தில் படித்தார். அங்குள்ள அரசு ஆண்கள் பள்ளியில் தான் மன்மோகன் சிங் தனது தொடக்க கல்வியை படித்தார்.
அதன்பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது 1948 ம் ஆண்டில் மன்மோகன் சிங் பிறந்த கா கிராமம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. தற்போது அந்த கா கிராமம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கீழ் உள்ளது. இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து மன்மோகன் சிங் குடும்பத்தினர் நம் நாட்டின் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரசுக்கு குடிபெயர்ந்தனர். அதன்பிறகு மன்மோகன் சிங் சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாடுகளில் மேல்படிப்பை முடித்தார்.
கடந்த 2004ம் ஆண்டில் மன்மோகன் சிங் நம் நாட்டின் பிரதமராக பதவியேற்றபோது பாகிஸ்தானில் அது பேசும்பொருளானது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கப்பட்ட அவரது கிராமமான கா-வில் கொண்டாட்டம் களைகட்டியது. அதன்பிறகு மன்மோகன் சிங்கை பெருமைப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு அந்த கிராமத்தை ஐடியல் வில்லேஜ் என அறிவித்தது. அதுமட்டுமின்றி கா கிராமத்தில் மன்மோகன் சிங் படித்த அரசு ஆண்கள் பள்ளியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பள்ளிக்கு மன்மோகன் சிங் அரசு ஆண்கள் பள்ளி என்று 2007 ம் ஆண்டில் பெயர் சூட்டப்பட்டது. தற்போதும் அந்த பள்ளி மன்மோகன் சிங் அரசு ஆண்கள் பள்ளி என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது.
இப்படி நம் நாடு மட்டுமின்றி தற்போது எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தானும் கவுரவித்த தலைவராக மன்மோகன் சிங் வாழ்ந்தார். அதுமட்டுமின்றி கா கிராமத்தில் வசிக்கும் மக்கள் மன்மோகன் சிங்கை அந்த கிராமத்துக்கு பலமுறை வரும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனையால் மன்மோகன் சிங் செல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் கூட கா கிராம மக்கள் மன்மோகன் சிங் மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக மன்மோகன் சிங் மீது அதிக மரியாதையும், பாசமும் தான் வைத்திருந்தனர்.
குறிப்பாக கா கிராமத்தில் மன்மோகன் சிங்குடன் தொடக்க பள்ளியில் படித்த ராஜா முகமது அலி என்பவர் இந்தியா வந்து அவரை சந்தித்து சென்றார். நானும், மன்மோகன் சிங்கும் ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். அதன்பிறகு சாக்வால் டவுனுக்கு மன்மோகன் சிங் படிக்க சென்றாலும் கூட இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டோம். மன்மோகன் சிங்கிற்கு நான் நன்றி சொல்கிறேன். ஏனென்றால் மன்மோகன் சிங்கால் தான் எங்களின் கிராமம் கா ஐடியல் கிராமமாக மாறி உள்ளது. அதன்பிறகு தான் நல்ல ரோடு, தெருவிளக்குகள், ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள், மருத்துவமனைகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைத்தது என்று தெரிவித்ததும் இங்கே நினைவுக்கூரத்தக்கது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications