சுக்கு சுக்கா நொறுங்கிய பாகிஸ்தானின் சீன ரக JF-17 போர் விமானம்.. நடுவானில் உடைத்தெறிந்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் ஏர்போட்டை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து அழித்துவிட்டது.. குறிப்பாக பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான F16 விமானம், 2 JF போர் விமானங்களை இந்தியா ராணுவம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்திய நிலையில், பாகிஸ்தானின் JF17 போர் விமானத்தையும் இந்திய விமானப்படை நொறுக்கியுள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்திய ராணுவம் பதிலடி தந்து வருகிறது. இதற்கெனவே ஆபரேஷன் சிந்தூர் மூலமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்தியா, அங்கிருந்த 9 பயங்கரவாதி முகாம்களை தாக்கி அழித்தது. உடனே பாகிஸ்தானும், எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது உடனடியாக தாக்குதலை நடத்தியது...

Pakistan JF17 fighter jets IAF JF17

இந்திய ராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக, பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை தோற்கடித்தது..

இன்று மறுபடியும் ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான F16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியிருக்கிறது.. பாகிஸ்தானின் சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த F16 போர் விமானமும், அதேபோல் 2 JF போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தியது.

பாகிஸ்தானின் JF17 போர் விமானத்தை இந்திய விமானப்படை எதிர்தாக்குதல் நடத்தி அதனையும் வீழ்த்தியிருக்கிறது.. JF17 என்ற போர் விமானம், சீனாவின் தயாரிப்பாகும்.. இது இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோதே, இந்திய ராணுவம் அதனை நொறுக்கிவிட்டது..

முன்னதாக, பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியபோது, அதனை இந்திய விமானப்படை முறியடித்து பதிலடி தந்தது.. அதாவது S400 சுதர்சன் சக்கராவை பயன்படுத்தி அவைகளை தடுத்து வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

உறுதிப்படுத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தானின் JF-17 என்ற 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படையும், ராணுவமும் இடைமறித்து சுட்டு வீழ்த்திய நிலையில், இதனை பாகிஸ்தானின் ராணுவ படை தளபதிகளில் ஒருவரான அகமது ஷரிப் சவுத்திரி உறுதிப்படுத்தியிருக்கிறார். தங்களது இரண்டு போர் விமானங்களும் பணிகளுக்கு இடையே இழந்துவிட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+