அட குண்டெல்லாம் எங்க மேல விழலைங்க.. காலி இடத்துலல்ல விழுந்துச்சு.. சமாளிக்கும் பாக்.!
Recommended Video

டெல்லி: இந்திய போர் விமானங்கள் ஊடுருவின. ஆனால் பாகிஸ்தான் விமான படைகள் தக்க பதிலடிகளை கொடுத்துவிட்டதால் அவை பயந்து ஓடிவிட்டன என்றும் இதனால் எவ்வித பொருட்சேதமோ உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என பாகிஸ்தான் அரசு வெத்து கெத்து காட்டியுள்ளது.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை நாம் இழந்தோம். இதனால் இந்தியாவில் ஆண், பெண் பேதமின்றி பாகிஸ்தானுக்கு எதிராக கொந்தளித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய படைகள் இரவு பகல் பாராமல் வியூகம் வகுத்து வந்தன. இதன் முன்னேற்பாடாக ராஜஸ்தானில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தின.

கூடாரங்கள் காலி
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமான படையின் மிராஜ் 2000 என்ற 12 விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று 100 கிலோ வெடிப்பொருட்களை வீசின. இதில் தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் காலியானது.

இந்திய விமான படை
இந்த தாக்குதலால் 200- 300 தீவிரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு விமான படைக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆனால் பாகிஸ்தானோ எதுவுமே நடக்காத மாதிரி ஒரு ரியாக்ஷனை கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் முசாஃபர்பாத் பகுதியிலிருந்து இந்திய விமான படைகள் ஊடுருவின.

பாகிஸ்தான் டுவீட்
அந்த சமயம் பாகிஸ்தான் விமான படைகள் உரிய நேரத்தில் பதிலடி கொடுத்தன. இங்கிருந்து இந்தியா தப்பியோடிய போது பதற்றத்தில் காலி மைதானத்தில் வெடிப்பொருட்களை வீசியது. இந்தியா மீது நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மண் ஒட்டலை
350 கிலோ வெடிப்பொருட்களால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் போது 1000 கிலோ வெடிப்பொருட்களால் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என கூறுவது குப்புறத்தான் விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையால்ல இருக்கு.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications