டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தான் நம்மை பிரிக்க பார்க்கிறது.. நம் வளர்ச்சியை தடுக்கிறது.. பாஜகவினரிடையே மோடி குமுறல்!

பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். தேர்தல் குறித்து ஆலோசனை செய்த அவர் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.

[Read more: இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்யுங்கள்.. இம்ரான் அரசுக்கு பூட்டோ குடும்பம் கோரிக்கை]

பொய்

பொய்

அவர் தனது பேச்சில், இந்திய மக்கள் பாகிஸ்தான் பரப்பும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டிய நேரம் இது. இந்தியாவை பிரிக்க பாகிஸ்தான் முயல்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை நிறுத்தவே பாக். முயல்கிறது.

வேண்டும்

வேண்டும்

மத்திய அரசை மக்கள் நம்ப வேண்டும். யாராலும் செய்ய முடியாது என்று நினைத்த காரியத்தை நாம் நிகழ்த்தி உள்ளோம். புதிய இந்தியாவை உருவாக்க நாம் பாடுபட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் பாடுகிறோம்.

தாக்குதல்

தாக்குதல்

தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தி நம்மை முடக்க பார்க்கிறார்கள். நாம் பாறை போல உறுதியாக நின்று அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அடிபணிய கூடாது. எனக்கு ராணுவத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

முழக்கம்

முழக்கம்

ஒன்றாக வாழ்வோம்; ஒன்றாக வளர்வோம்; ஒன்றாக போரிடுவோம்; ஒன்றாக வெற்றிபெறுவோம். நாம் மிக கடுமையாக உழைத்து வருகிறோம் . நமது ராணுவ வீரர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ராணுவ வீரர்களால்தான் நம் நாடு வேகமாக பாதுகாப்புடன் முன்னேறுகிறது, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
We have to be hardworking in all sectors. India is grateful to all those who are protecting the nation. It is because they are there, the nation can reach new levels of development. Enemies try to destabilize us, carries out terror attacks, they want to stop our growth. We all countrymen are standing like a rock to counter their evil designs says PM Modi in BJP meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X