டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத்திற்குள் நுழைய பிளான்.. கமாண்டோ தாக்குதலுக்கு பாக். திட்டம்.. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்!

குஜராத் வழியாக பாகிஸ்தான் கமாண்டோக்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் நடக்கும்.. பாக். அமைச்சர் பகீர் பேட்டி

    டெல்லி: குஜராத் வழியாக பாகிஸ்தான் கமாண்டோக்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக ராஜாங்க நடவடிக்கையை மேற்கொள்ள பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வந்தது.

    ஆனால் பாகிஸ்தானின் முயற்சி பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவ ரீதியான நடவடிக்கையை எடுக்க முயன்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் கடற்படை தளபதி கரம்பீர் சிங் மத்திய அரசுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருந்தார். அதன்படி கடல் வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளது. கடல்வழியாக இரவோடு இரவாக உள்ளே வந்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.

    சொன்னது

    சொன்னது

    இந்த நிலையில் அவர் சொன்னது போலவே தற்போது குஜராத் வழியாக பாகிஸ்தான் கமாண்டோக்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் இந்தியா - பாக் ஜலசந்தியில் உள்ள கடல் பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    யார் அவர்கள்

    யார் அவர்கள்

    பாகிஸ்தானின் பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி கமாண்டோ படைகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. அல்லது அவர்களிடம் பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள், பிரிவினைவாத குழுக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது.

    அதிகம்

    அதிகம்

    இதனால் தற்போது எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீர், குஜராத் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர பகுதிகளில் கடற்படை குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Pak trained SSG commandos or terrorists would try to enter Gulf of Kutch and Sir Creek area using small boats
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X