இது லிஸ்ட்லயே இல்லையே! இந்தியரை வீடியோ காலில் திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்! காரணத்த பாருங்க! ஆஹா
டெல்லி: இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாகிஸ்தான் இளம்பெண் ஆன்லைனில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்த இருவரின் குடும்பத்தினர் முயன்ற நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்டால் வீடியோ காலில் அவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடல் கடந்து திருமணம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் சமீபத்தில் சமூக வலைதளங்களில், இணையதள விளையாட்டுகள் மூலம் பழக்கமாகும் வேறு நாடுகளை சேர்ந்த இளம்பெண், இளைஞரை திருமணம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் பப்ஜி விளையாட்டின் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரை சேர்ந்த சீமா என்ற 27 வயது பெண் தனது 4 குழந்தைகளுடன் எல்லை கடந்து இந்தியா வந்து உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சச்சின் (22) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் இந்து மதத்துக்கு மாறி குழந்தைகளின் பெயரை மாற்றினார். இது பெரிய அளவில் பேசு பொருளானது.
இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்திய இளைஞரும், பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணும் வீடியோ கால் மூலம் திருமணம் செய்துள்ளனர். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. மாறாக இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் கடைசி நேரத்தில் வந்த பிரச்சனையால் வீடியோ காலில் நடந்து முடிந்துள்ளது.
அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் அர்பாஸ் கான். இவர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டாக உள்ளார். இவருக்கு பாகிஸ்தான் உறவினர்கள் உள்ளனர். உறவினர்கள் மூலம் கராச்சியை சேர்ந்த அமீனா என்ற பெண்ணுக்கும், அர்பாஸ் கானுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்துக்கு அர்பாஸ் கான், அமீனா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இருவரின் திருமணத்தையும் வெகுவிமரிசையாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை அர்பாஸ் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வந்தனர். இருவரின் திருமணத்தையும் ஆகஸ்ட் 4ம் தேதி நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அமீனா பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கு வருவதற்காக விசா எடுக்க விண்ணப்பம் செய்தார். தனது திருமணத்தை காரணமாக காட்டி அவர் விசா கோரினார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படாமல் விசா மறுக்கப்பட்டது. அமீனா விசா பெற போராடினார். ஆனால் கடைசி வரை விசா கிடைக்கவே இல்லை.
இதற்கிடையே திருமண தேதியும் நெருங்கியது. இதனால் வேறு வழியின்றி அர்பாஸ் கான்-அமீனாவின் திருமணத்தை வீடியோ காலில் நடத்த இருவரின் குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவரின் திருமணமும் வீடியோ கால் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் அமீனாவும், இந்தியாவில் அர்பாஸ் கானும் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணம்சார்ந்த சடங்குகளையும் முறைப்படி இருவரின் குடும்பமும் வீடியோ மூலமாகவே செய்து முடித்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்து ஜோத்பூர் காசி முன்னிலையில் நடந்து முடிந்தது.
இதுபற்றி அர்பாஸ் கான் கூறுகையில், ‛‛நான் பாகிஸ்தான் சென்று அமீனாவை திருமணம் செய்தால் அதனை ஏற்க மாட்டார்கள். இதனால் அமீனா இந்தியா வர முடிவு செய்து விசாவுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதனால் வீடியோ கான்பன்ஸ் மூலம் திருமணம் செய்து கொண்டோம். மீண்டும் அமீனா விசா விண்ணப்பம் செய்து இந்தியா வருவார். அப்போது மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications