வெறும் உதார்தான்.. பாகிஸ்தான் போருக்கு வராது.. டீசல் இல்லை, கருவூலம் காலி! அம்பலமான உண்மைகள்!
டெல்லி: இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டால் (India-Pakistan war), அது வெறும் நான்கு நாட்களில் பாகிஸ்தானின் தோல்வியுடன் முடிவுக்கு வரும். இந்த மதிப்பீடு எந்தவொரு வெளிநாட்டு சிந்தனைக் குழுவின் கருத்து அல்ல, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சொன்ன கருத்து. பாகிஸ்தான் ராணுவம் 4 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும், போர் முடிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு வழக்கமான உற்சாகமூட்டும் அரசியல் பேச்சாக தெரியலாம். ஆனால், நிஜமும் அதுதான். பாகிஸ்தானின் பொருளாதாரம், எரிபொருள் பற்றாக்குறை போன்றவை அந்த நாட்டு பிரதமரின் கண்முன்பு வந்து போகாமல் இருக்க முடியாது.

பாகிஸ்தான் ராணுவத்தின் நெருக்கடி
பாகிஸ்தான் ராணுவம் எரிபொருள், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைவழி தகவல்கள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) பெறப்பட்ட உளவுத் தகவல்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாகிஸ்தான் வீரர்கள் ரேஷன் மற்றும் எரிபொருள் ஒதுக்கீடு பற்றாக்குறை குறித்து அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அதே வேளையில் முழு வீச்சில் ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது, ஆனால் பலவீனமான விநியோகச் சங்கிலியால், இந்திய வான்வழித் தாக்குதலுக்கு முன்பே இவை குறைக்கப்பட்டன.
இதற்கிடையில்,பிசினஸ் டுடே அறிக்கையில், தனி நபர் ஆய்வாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தால், பாகிஸ்தானின் எரிபொருள் மற்றும் வெடிமருந்து இருப்பு 3 முதல் 4 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

அந்நிய செலாவணி இருப்பின் மோசமான நிலை
ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவம் எரிபொருள் முதல் ரேஷன் வரை எல்லாவற்றிற்கும் சிரமப்படும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு அவர்கள் கண்களை கட்டுகிறது. நாட்டின் மோசமான நிலை மற்றும் காலியான கருவூலம் பாகிஸ்தான் பிரதமரின் கண்முன்பே வந்து செல்கிறதாம். பொய் சொல்லவில்லை. பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் 15 பில்லியன் டாலர்கள் மட்டுமே, இது மூன்று மாத உணவு உள்ளிட்ட, சிவில் இறக்குமதிகளுக்கு மட்டுமே போதுமானது.
பாதுகாப்பு தளவாடங்கள் இந்த இறக்குமதியில் முக்கியமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் போருக்குச் சென்றால், அந்நிய செலாவணி இருப்பு மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன.
கடன் சுமை அதிகரிக்கும் பிரச்சனைகள்
மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தான் நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியுடன் போராடி வருகிறது, நாட்டின் மீதுள்ள மிகப்பெரிய கடனைப் பார்க்கும்போது இதை உணரலாம். பாகிஸ்தான் 131 பில்லியன் டாலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ளது, இது அதன் GDP-யில் சுமார் 42 சதவீதமாகும்.
நாட்டின் பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியால் ஏதோ ஓடிக்கொண்டுள்ளது. ஆனால் அது விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள் பாதுகாப்புச் செலவினங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பைதான் கொடுக்கின்றன.
பணவீக்கம், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அடிப்படை இறக்குமதித் தேவைகளுடன் ஏற்கனவே போராடி வரும் பாகிஸ்தான், தனக்குத் தேவையான நிதியை தொடர்ந்து வழங்கும் IMF மற்றும் வெளிநாட்டுக் கடன் வழங்குபவர்களைச் சார்ந்துள்ளது, ஆனால் போர் இந்த சமநிலையை ஏறக்குறைய உடனடியாக சீர்குலைக்கும்.

நாட்டின் மக்கள் தொகையில் 37% வறுமையில்
GDP, அந்நிய செலாவணி இருப்பு மட்டுமல்ல, பாகிஸ்தான் எந்த நிலையிலும் இந்தியாவுடன் போரிடும் ரிஸ்கை எடுக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டும் வேறு சில புள்ளிவிவரங்களும் உள்ளன.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாகிஸ்தான் மக்கள் தொகையில் 37% க்கும் அதிகமானோர் ஏற்கனவே வறுமையில் வாடுகின்றனர், மேலும் 2018 முதல் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் சென்றுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தால், இந்த போர் பெரிய அளவில் வேலை இழப்புக்கு வழிவகுக்கும், பணவீக்கம் அதிகரிக்கும், மேலும் அதிகமான மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள்.

சிந்து நதி நீர் ஒப்பந்த தாக்கம்
2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. இது இந்தியா எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கை, இதனால் பாகிஸ்தான் நீரைச் சார்ந்து நிற்கும், மேலும் இதன் தாக்கம் சாமானிய மக்கள் முதல் நாட்டின் பொருளாதாரம் வரை காணப்படும்.
உண்மையில், நீர் நிறுத்தம் முதலில் பாதிப்பது விவசாயத்தைத்தான், இது பாகிஸ்தானின் GDP-க்கு 23% பங்களிக்கிறது மற்றும் கிராமப்புற மக்கள் தொகையில் 68% பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த நடவடிக்கை நீர்ப்பாசன விநியோகத்தில் ஒரு கூர்மையான சரிவுக்கு வழிவகுக்கும், இது பயிர் விளைச்சல், உணவு விநியோக சங்கிலிகள் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். அப்புறம் என்ன, பாகிஸ்தான் இந்த பக்கம் கூட திரும்பி பார்க்காமல் வாலை சுருட்டுவதை தவிர வேறு வழியில்லை.
-
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460.. அடுத்து இந்தியாதான்! எல்லாம் டிரம்பால் வந்த வினை! -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications