அத்துமீறும் போலீசார்கள்.. புகார்களை விசாரிக்க தனிக்குழு: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
காவல்துறையின் வரம்புமீறல்களை விசாரிக்க தனிக்குழு நியமனம்
டெல்லி: காவல்துறையின் வரம்புமீறல்களை விசாரிக்க தனிக்குழுவை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக்குழுவை விசாரிக்க வலியுறுத்தி உள்ளார்.
சில தினங்களுக்கு உபியில் நடந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது.. கோரக்பூரில் ஒரு ஹோட்டலில் போலீஸார் ரெய்டுக்கு சென்றிருந்தபோது, ஒரு தொழிலதிபர் இறந்துவிட்டார்.. இதன்காரணமாக அம்மாநில கூடுதல் டிஜிபி குர்ஜிந்தர் பால் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்தும் தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு தரக்கோரியும் குர்ஜிந்தர் பால் சிங் சுப்ரீம்கோர்ட்டில் மனு அளித்திருந்தார்..

எனினும், கூடுதல் டிஜிபி மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில், அவர் தாக்கல் செய்த மனு சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.. அப்போது, தேசத்துரோக வழக்கிலிருந்து மட்டும் கூடுதல் டிஜிபியை கைது செய்ய தலைமை நீதிபதி விலக்கு தந்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து ரமணா தெரிவிக்கும்போது, தமிழ்நாட்டிலும், கோரக்பூரிலும் போலீசார் சாமான்ய மக்களிடம் தங்கள் பலத்தை காட்டிய அப்பாவி மக்கள் உயிரிழக்க நேர்ந்த சம்பவங்களை எடுத்து காட்டினார்.. பிறகு அவர் சொல்லும்போது, "நாட்டில் சாமான்ய மக்கள் அளிக்கும் புகார்கள் அளவுக்கு அதிகமாக வருகின்றன.. இதில் போலீஸ் அதிகாரிகள் எல்லை மீறி கொடுமைகளை செய்வது வேதனை தருகிறது..
அதனால், போலீஸார் செய்யும் கொடுமைகள் குறித்து, மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.. ஏற்கனவே இந்த குழு அமைக்க நான் ஆதரவாக இருந்திருக்கிறேன்.
வழக்கு ஒன்றில் போலீஸ் அதிகாரி சிக்கிவிட்டால், அந்த வழக்கில் தண்டனை பெறாமல் தப்பிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது வட்டியுடன் திருப்பி செலுத்த நேரிடும்... இதற்கு முன்புகூட, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது குறி வைக்கப்படும்.. இது ஏற்க முடியாது.. வேதனைக்குரியது..
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, போலீஸ் அதிகாரிகள் அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள், ஆனால், அதுவே அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, கடந்த ஆட்சிக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது... இந்த போக்கு முதலில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications