டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெத்து காட்டிய இந்தியா! குடியரசு தின அணிவகுப்பில்.. கவனம் ஈர்த்த "டாப்" ஆயுத வாகனங்கள்.. அடிதூள்

இந்தியாவின் 74வது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் டாப் ஆயுத வாகனங்கள் அணிவகுத்தன.

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதன் முறையாக டெல்லியின் 'கடமை பாதையில்' ராணுவ வீரர்கள் அணிவகுத்துள்ளனர். இந்த ஆண்டு அணிவகுப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி MBT அர்ஜுன் டாங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 75 கவசப் படைப்பிரிவின் அர்ஜுன் கேப்டன் அமன்ஜீத் சிங் தலைமையில் இந்த டாங்கிகள் அணிவகுத்தன. இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை டாங்கிகளாகும். இந்த டாங்கியானது 120 மிமீ பிரதான துப்பாக்கி, 7.62 மிமீ கோஆக்சியல் இயந்திர துப்பாக்கி மற்றும் 12.7 மிமீ விமான எதிர்ப்பு இயந்திர துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் என்ஜின் 1400 குதிரை திறன் கொண்டதாகும். இந்த அளவுக்கு திறன் கொண்ட கார் மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பறக்கும். ஆனால் 58.5 டன் எடை கொண்ட இந்த அர்ஜுன் டாங்கியை இந்த அளவுக்கு வேகத்தில் நகர்த்த முடியாது என்றாலும் இந்த டாங்கிகள் அதிகபட்சமாக சுமார் 70 கி.மீ வேகத்தில் நகரும்.

டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடியேற்றினார் ஜனாதிபதி.. குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம்!டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடியேற்றினார் ஜனாதிபதி.. குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம்!

டாங்கி அழிப்பு

டாங்கி அழிப்பு

அதேபோல இந்த அணிவகுப்பில் அனைவரையும் பிரமிக்க வைக்க வைத்த ஆயுதம் 'நாக் ஏவுகணை அமைப்பு' (NAMIS). இது ஒரு டாங்கர் அழிப்பான் ஆயுதமாகும். இதுவும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். இது சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள எந்த டாங்கரையும் தகர்த்தெறிந்துவிடும். இதனை இலக்கு நோக்கி ஏவிவிட்டால் அதனை மீண்டும் திசை திருப்பவோ பின்வாங்கவோ செய்ய முடியாது. இந்த ஆயுதங்கள் டாங்கர்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.

டாங்கி

டாங்கி

இந்த டாங்கர்களில் மொத்தம் 6 நாக் ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். இதிலிருந்து எந்த டாங்கிகளும் தப்பிக்க முடியாது. இந்திய ராணுவத்தை பொறுத்த அளவில் இது ஒரு கேம்-சேஞ்சர் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்து காட்சிப்படுத்தப்பட்ட திறமையான போர் வாகனம்தான் BMP2/2 K. இதுவும் ஒரு வகையான பீரங்கிதான். ஆனால் இது இலகு வகை பீரங்கி என்பதால் எங்கு வேண்டுமானாலும் இதனை எளிதாக கொண்டு செல்லலாம். குறிப்பாக இரவு நேர சண்டையில் இது தன்னுடைய முழு திறமையை காட்டும். அதிகபட்சமாக சாலையில் 75கி.மீ வேகத்திலும், மண், மணல், மலை பாறைகள் போன்ற இடங்களில் 45 கி.மீ வேகத்திலும், நீரில் 7 கி.மீ வேகத்திலும் இயங்கும்.

 கவச வாகனம்

கவச வாகனம்

தற்போது வரை நாம் பார்த்த ஆயுத வாகனங்கள் அனைத்தும் முதல் தரமானது. இதற்கடுத்து காட்சிப்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டாம் தரமானதாகும். அந்த வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வாகனம்தான் Quick Reaction Fighting Vehicle (QRFV). இதனை விரைவு எதிர்வினை சண்டை வாகனம் என்று அழைப்பார்கள். இந்த வாகனங்கள் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் டாடா அட்வான்ஸ் சிஸ்டம் மற்றும் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் ஆகியவை இணைந்து இந்திய ராணுவத்திற்காக தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சுமார் 10 பேர் வரை ஆயுதங்களுடன் பயணிக்கலாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அதிகபட்சமாக இது 80 கி.மீ வேகத்தில் சுமார் 600 கி.மீ வரை இது பயணிக்கும் திறன் கொண்டது. இந்த வாகனத்திற்கு பாதுகாப்பாக 7.62 மிமீ இயந்திர துப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதனை எஸ்காட் வாகனமாகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த வாகனம் 360 அளவில் துல்லியமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். எந்த பக்கத்திலிருந்து துப்பாக்கியால் தாக்கினாலும் இந்த வாகனத்தை துளையிட முடியாது. எனவே ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல இது பயன்படுத்தப்படுகிறது.

வஜ்ரா

வஜ்ரா

அடுத்த வாகனம் K-9 Vajra-T (SP). இது இந்திய ராணுவனத்தின் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பீரங்கி என்று சொன்னால் மிகையாகாது. இது பாலைவனத்தில் பயணிப்பதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணில் சுமார் 60 கி.மீ வேகத்தில் இது பயணிக்கும். இதிலிருந்து சுமார் 40 கி.மீ வரை குண்டுகளை ஏவ முடியும். இதனையடுத்து பிரமோஸ் ஏவுகணைகளும் இதர உள்நாட்டில் தயாரிக்கப்பட் ஏவுகணைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. சமீப காலமாக சீனா எல்லை பிரச்னையில் இந்தியாவை சீண்டி வரும் நிலையில் தற்போது அணிவகுத்துள்ள ஆயுதங்கள் சீனாவை எச்சரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

English summary
As the country's 74th Republic Day is being celebrated, army personnel have marched on Delhi's 'line of duty' for the first time. This year's parade featured only locally made weapons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X