பெற்ற பெண்ணை வேவு பார்த்த பெற்றோர்.. விபச்சார விடுதிக்கு போன மகள்! இதுக்காகத்தான்
டெல்லி: டெல்லியில் மகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க பெற்றோர் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை நியமித்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தனியார் துப்பறியும் நிபுணர் தன்யா பூரி வெளியிட்ட இந்த வீடியோவில், தங்கள் மகளுக்கு ரகசிய காதலன் இருப்பதாக சந்தேகித்த பெற்றோர், உண்மை நிலையை அறிய தன் குழுவை நியமித்ததாக அவர் குறிப்பிட்டார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் பூரி கூறியதாவது, "டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த தன் மகளுக்கு காதலன் இருக்கிறானா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டது. காதல் குறித்து பெற்றோரும் பேசவில்லை, அவளும் சொல்லவில்லை. எனவே அவளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க எங்களை நியமித்தனர். நான்காவது நாளில், அவள் GTB நகர் பகுதிக்குச் சென்றாள்.
அவள் அங்கே சென்றடைந்தபோது, அது விபச்சார விடுதிகள் இருக்கும் பகுதி என்பதை நாங்கள் அறிந்தோம். அவள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது, அவளுடைய கூடுதல் ஷாப்பிங் மற்றும் பாக்கெட் பணத் தேவைகளுக்காக என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
அவளது கல்லூரி நண்பர்கள் ஆடம்பரமான விருந்துகளையும் சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்தனர். ஜாராவில் ஷாப்பிங் செய்ய, உணவகங்களுக்குச் செல்ல அவளுக்குப் பணம் தேவைப்பட்டது. பெற்றோருடன் அவள் வணிக வளாகங்களுக்குச் செல்லவில்லை. இந்த செலவுகளுக்கு அவளுக்கு அந்தப் பணம் தேவைப்பட்டது" என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் பெற்றோரின் முன்னுரிமைகளையும் அணுகுமுறையையும் கடுமையாகச் சாடினர்.
ஒரு பயனர், "பெற்றோரால் ஒரு துப்பறியும் நிபுணருக்கு பணம் கொடுக்க முடிந்தபோது, தங்கள் மகளுக்கு செலவுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை பாருங்க" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "துப்பறியும் நிபுணர்களை நியமிப்பதற்குப் பதிலாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேசக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மற்றொருவர், "அவளுக்கு ஷாப்பிங் செய்ய பெற்றோரிடம் பணமில்லை, ஆனால் தனியார் துப்பறியும் நிபுணர்களை நியமிக்க பணமிருந்தது? இது ஒரு நகைச்சுவை" என்று குறிப்பிட்டார். மற்றொரு பயனர், "விசித்திரமாக உள்ளது. குடும்பம் மிகவும் பழமைவாதமானது. காதலன் வைத்துக் கொள்ளவும், ஆடம்பரமாக ஷாப்பிங் செய்யவும் அனுமதிக்கவில்லை. ஆனால் மகளை உளவு பார்க்க ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்க முடியும். ஆச்சரியம்" என்று கருத்து தெரிவித்தார்.
-
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்? -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications