"எங்க குழந்தைகளை பார்தீங்களா!" குஜராத் பால விபத்து.. அழுது புலம்பும் பெற்றோர்கள்! தொடரும் மீட்பு பணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் மோர்பி பாலம் இடிந்து மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த மோர்பி தொங்கு பாலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபத்தில் பாலத்தின் மீது இருந்த பலரும் அப்படியே ஆற்றில் விழுந்தனர். நாட்டில் நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

விபத்து

விபத்து

1879இல் கட்டப்பட்ட இந்த பாலம், இந்தாண்டு தொடக்கத்தில் தான் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டன. 8 முதல் 12 மாதங்கள் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டும் என்ற நிலையில், அது முன்கூட்டியே குஜராத் புத்தாண்டிற்காக அக். 26இல் திறக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக வெறும் 2 கோடி ரூபாய் செலவில் இந்த புனரமைப்பு பணிகளை அவர்கள் முடித்து இருக்கிறார்கள்.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த கோர விபத்து நிகழ்த்து உள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 140 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு முழு பொறுப்பு ஏற்பதாகக் குஜராத் அரசு அறிவித்து உள்ளது. இன்னும் கூட விபத்தில் பலர் மாயமாகி உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்குப் பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார்.

 தொடரும் மீட்புப் பணி

தொடரும் மீட்புப் பணி

மீட்புப் பணிகள் மூன்றாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இன்னும் கூட பலர் தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்டுபிடிக்க முடியாமல் அச்சத்துடனும் குழப்பத்துடனும் இருக்கிறார்கள். அப்படி அச்சத்துடன் அங்குச் சுற்றி வருபவர் தான் 30 வயதான பிரதாப் சிங் ஜடேஜா. இவரது கர்ப்பிணி மனைவி, இரண்டு குழந்தைகள், மைத்துனர், சகோதரரின் மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் என ஏழு பேர் சமீபத்தில் மெல்டி அம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.

 குடும்பமே போச்சு

குடும்பமே போச்சு

கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் பழமையான தொங்கு பாலத்திற்குச் செல்ல வேண்டும் எனக் குழந்தைகள் அடம்பிடித்து உள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் மோர்பி பாலத்திற்குச் சென்றுள்ளனர். பாலத்தின் நடுவே இவர்கள் சென்ற போது, அது அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். பிரதாப் சிங் ஜடேஜாவும் அவரது சகோதரரும் ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்.

 அதிக கூட்டம்

அதிக கூட்டம்

அதேபோல 52 வயதான தையாப் சும்ரா இரு குழந்தைகள் உட்பட மூன்று நெருங்கிய உறவினர்களை இழந்துள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல இப்படிப் பல பேரின் கதைகள் அங்கு உலா வந்து கொண்டு இருக்கிறது. அதேநேரம் பாலத்திற்கு வழக்கமாகச் செல்பவர்கள் அதில் அதிகப்படியான நபர்கள் இருப்பதைக் கண்டு எச்சரிக்கையுடன் இருந்து உள்ளனர். மேலும், சிலர் டிக்கெட் வாங்கினாலும் பாலத்தில் செல்வதைத் தவிர்த்து உள்ளனர்.

 உயிர் பிழைத்தோம்

உயிர் பிழைத்தோம்

இது தொடர்பாக விபத்தில் உயிர் பிழைத்த சிலர் கூறுகையில், "நாங்கள் அங்கே சென்ற போது வழக்கத்தை விடப் பாலத்தில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பாலத்தில் கொஞ்ச தூரம் சென்ற உடனேயே இதை நாங்கள் உணர்ந்தோம். இது பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்ந்து நாங்கள் திரும்பத் தொடங்கினோம். அப்போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அப்போது நாங்கள் சேற்றில் விழுந்ததால் உயிர் பிழைத்தோம். இல்லையென்றால் நாங்களும் ஆற்றில் மூழ்கியிருப்போம்" என்றார்.

 பெற்றோர்

பெற்றோர்

41 வயதான நிரவ் வோரா கூறுகையில், "பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்ட போது, மேலே இருந்த மக்களில் பலர் தண்ணீரில் மூழ்கினர். நேற்று மாலை வரையிலும் கூட அனைவரது உடல்களும் மீட்கப்படவில்லை. பெற்றோர்கள் ஆற்றின் கரையில், தங்கள் குழந்தைகளின் ஃபோட்டோக்களை வைத்து குழந்தைகளைப் பதற்றத்துடன் தேடி வந்தனர். அதையெல்லாம் பார்க்கும் போது தாங்க முடியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+