ஒலிம்பிக் போட்டி: ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர்- பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஏர் பிஸ்டல் எனும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் மனு பாக்கர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் இன்று வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதலாவது பதக்கம் இது. ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது.

இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்த மனு பாக்கருக்கு நாட்டு மக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பக்கத்தில், இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (ParisOlympics2024!) இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker ) வாழ்த்துகள். வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான சாதனை! #Cheer4Bharat". இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். இதேபோல மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மனு பாக்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications