நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. அனைத்து எம்பிக்களுக்கும் கட்டாய கொரோனா சோதனை.. சபாநாயகர் அறிவிப்பு!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற எம்பிக்களுக்கு கொரோனா சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பிற்கு இடையே மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அவைக்குள் சமூக இடைவெளி விட வசதியாக, இருக்கைகள் மாற்றப்பட உள்ளது. மேலும் அவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் எம்பிக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா சோதனை முடிவுகளை அவையில் எம்பிக்கள் அளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பணியாற்றும் நபர்களும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களும் கொரோனா சோதனை செய்வது கட்டாயம்.
இந்த முறை பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவை தொடங்கி இடைப்பட்ட நாட்களிலும் கொரோனா சோதனை செய்யப்படும்.
எம்பிக்களுக்கு ரேண்டம் கொரோனா சோதனை அவ்வப்போது செய்யப்படும். எம்பிக்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையிலேயே இந்த சோதனைகளை செய்கிறோம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications