நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நீலம், சாகர்.. யார் இவர்கள்? தாக்குதல் நடத்தியது ஏன்? பின்னணி
டெல்லி; நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். நீலம் என்ற 42 வயது பெண்ணும் சாகர் சர்மா என்ற 25 வயது இளைஞரும் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவைக்குள் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்து. புகை குண்டுகளை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகை ஏற்படுத்தும் குண்டுகளை அவர்கள் உள்ளே கொண்டு வந்துள்ளனர். மறைத்து வைத்து அவர்கள் கொண்டு வந்த குண்டுகளை அவைக்குள் தூக்கி எரிந்து உள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கையில் கொண்டு வந்த அவர்கள் மக்களவைக்குள் புகுந்து கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.

இதை கலர் பாம்ஸ் என்று அழைப்பார்கள். புகை மட்டுமே வரும். ஆனால் உயிர் சேதம் ஏற்படாது. முக்கியமாக திருமணங்கள், டிஜே நிகழ்வுகளில் இதை பயன்படுத்துவார்கள். சிறியதாக 250 எம்எல் வாட்டர் பாட்டில் போல இருக்கும். இதைத்தான் மறைத்து உள்ளே கொண்டு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த பாம் இப்போதெல்லாம் பல கடைகளில் கிடைக்கும். பெரிய ஸ்டோர்களில் கூட கிடைக்கும். ஆன்லைனில் எளிதாக வாங்க முடியும். இது விதமான சேதத்தையும் ஏற்படுத்தாது. கண்ணீர் புகை குண்டு போல இருக்கும். அதேபோல் புகை வரும்.
தாக்குதல் நடத்தியது யார்?: நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். நீலம் என்ற 42 வயது பெண்ணும் சாகர் சர்மாஎன்ற 25 வயது இளைஞரும் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (42), மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாகர் சர்மா (25) ஆகியோர் இன்று லோக்சபாவில் தாக்குதல் நடத்தியதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போது நீலம் அது தொடர்பாக பேட்டி அளித்தார். அதில்.. நாங்கள் சாதாரண மாணவர்கள். எங்களுக்கு பின் எந்த அமைப்பும் இல்லை.
எங்களுக்கும் எந்த அமைப்பிற்கும் தொடர்பு இல்லை. நாங்கள் இந்த அரசை எதிர்க்கிறோம். இவர்கள் சர்வாதிகாரம் செய்கிறார்கள். அதை எதிர்த்து இந்த தாக்குதல் நடத்துகிறோம். இந்த அரசை நீக்க வேண்டும். நாங்கள் சாதாரண மாணவர்கள்தான், என்று நீலம் பேட்டி அளித்துள்ளார்.
“We are not associated with any organisation. We are students and normal citizens. Our protest is against the dictatorship of this government.” - detained protester Neelam#SecurityBreach #ParliamentAttack2001 #LokSabha #ParliamentWinterSession pic.twitter.com/VCnc9iWnid
— Faheem (@stoppression) December 13, 2023
இதற்கு முன்பே நடந்துள்ளது: கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று சரியாக இதே நாளில் நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர்.
இந்திய வரலாற்றில் அது மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். அப்போதைய பாஜக அரசு மீது இதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உலக நாடுகளையே இந்த தாக்குதல் திரும்பி பார்க்க வைத்தது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . டிசம்பர் 13, 2001 அன்று உள்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
அதே நாளில் தாக்குதல்: இந்தியாவின் கருப்பு தினம் என்று அந்த நாள் அழைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலின் நினைவு நாள் இன்று. அதே நாளில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.












Click it and Unblock the Notifications