Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மோடானிகள்”.. நாக்பூர் தலைமையின் நண்பருக்காக.. நாடாளுமன்றமே நடக்கல! பாட்டாகவே பாடிய சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானிக்காக பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு முறையாக நடக்காமலேயே நிறைவடைந்துவிட்டது என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.சு.வெங்கடேசன் ட்விட்டரில் கவிதையாக பதிவிட்டு உள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியதை நாள் தோறும் நிரூபித்ததாகவும், மோடானிகளை அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2 வது அமர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி கூடியது. இதிலும் தொடக்கத்தில் இருந்தே அதானியின் ஷெல் நிறுவனங்கள் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மறுபக்கம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்க சொல்லி பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

குறிப்பாக அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அவைத் தலைவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் இரு அவைகளிலிலும் தொடர்ந்து அமளி துமளியாகவே இருந்தது. நேற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள்.

கடைசி வரை அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் போதிய மசோதாக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே இன்று நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு.வெங்கடேசன் பதிவிட்டு உள்ளார்.

சு.வெங்கடேசனின் கவிதை

 Parliament didnt run for Nagpurs friend Adani - CPM MP Su Venkatesan

அதில், "பட்ஜெட் தொடரின்
இரண்டாவது அமர்வு
அதானிக்காக
அமரவே இல்லாமல்
முடிந்தது இன்று.

நாக்பூர் தலைமையகத்தின்
நடைப்பயிற்சி நண்பருக்காக
25 நாட்கள்
நாடாளுமன்றம் நடக்காமல் பார்த்துக் கொண்ட
"அரசியல் தியாகம்"

அதானிக்காக
அந்நிய மண்ணில்
அனாமதேய நிறுவனங்கள்...

ஒரு வார்த்தை கூட சொல்லாத
பிரதமரின் மௌனம்...
விசாரிக்காதாம்
நாடாளுமன்றக் குழு...

ஜனநாயகம் இல்லை என்று
வெளி நாட்டில்
ராகுல்
சொன்னாரென்று..
நாடாளுமன்றத்தில்
நாள் தோறும் நிரூபித்தனர்.

எதிர்க்கட்சிகள் போராடுவது
ஜனநாயகத்தை காப்பாற்ற,
ஆளும் கட்சியே
அவையை முடக்குவது
ஜனநாயகத்தை முடக்க.

விவாதிக்க அஞ்சிய
"மோதானி" களை
மக்களிடம் அம்பலப்படுத்துவோம்." என்றார்.

அதானி பிரச்சனை என்ன?

கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் இருந்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி தன்னுடைய பங்கு மதிப்பை உயர்த்திக் காட்ட போலியான நிறுவனங்களை தொடங்கி நடத்தியதாக ஹிட்டன்பெர்க் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் பல்வேறு ஆதாரங்களுடன் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.

குஜராத்தை சேர்ந்த கவுதம் அதானி சோலார் மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், ஆடை, எண்ணெய் வர்த்தகம், ஊடகம், என பல துறைகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதானி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து இருக்கிறார். அத்துடன் இந்திய மக்களின் காப்பீட்டு பணத்தில் இயங்கும் எல்.ஐ.சி. அதானி நிறுவனத்தின் பங்குகளில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் பன்மடங்கு சரிந்து பல லட்சம் கோடியை இழந்தார். அத்துடன் உலக பணக்காரர்கள் வரிசையில் 35 வது இடத்திற்கு கீழ்ன் அவர் சரிந்தார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் இருந்தே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+