திமுக எம்பி ஒருவர் உள்பட... 25 எம்பிக்களுக்கு... கொரோனா தொற்று உறுதி!!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு இன்று வந்த 25 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பாஜக எம்பிக்கள் 12, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 2 பேர், சிவ சேனா, திமுக, ஆர்எல்பி கட்சிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 25 பேரில் 17 பேர் மக்களவை எம்பிக்கள், 9 பேர் மாநிலங்களவை எம்பிக்கள் என்பது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. நேற்றே நாடாளுமன்றத்துக்கு கொரோனா பாதுகாப்பு கிட் கொண்டு வரப்பட்டு இருந்தது. நேற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த பாஜக எம்பி சுகந்தா மஜூம்தர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக நேற்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மீனாட்சி லேகி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் செர்ந்தாஹ் திமுக எம்பி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் யார் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 785 எம்பிக்களில் 200 பேர் 65 வயதுக்கும் அதிகமானவர்கள். இதற்கு முன்னதாக 25 எம்பிக்கள் மற்றும் 7 மத்திய அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இவர்களில் அமைச்சர் அமித் ஷாவும் ஒருவர், இவருக்கும் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை நடந்து வருவதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ராஜ்ய சபையில் உறுப்பினர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்கள் தங்களது வருகையை குறிப்பிட தனியாக ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் மாஸ்க், முகத்தை மறைக்கும் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications