ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. எதிர்க்கட்சிகள் முழக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும் நிலையில் முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றம் வருடத்திற்கு மூன்று முறை கூட்டப்படுவது வழக்கம். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கும்.

Union Budget Union Budget 2026 Nirmala Sitharaman

1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

அதன்படி இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அரசின் திட்டங்கள், அரசு முன்னெடுக்க இருக்க கூடிய திட்டங்கள் உள்ளிட்டவை பற்றிய அறிவிப்புகளை குடியரசுத்தலைவர் பேசினார். உலகிலேயே அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது எதிர்க்கட்சிகள் கடும் முழக்கத்தில் ஈடுப்பட்டன.

இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13 ஆம் தேதி வரையும், 2 ஆம் அமர்வு மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரையும் நடக்கிறது. நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள்?

நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் ஆகும். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் தங்கள் விலை உள்ளிட்டவைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

இந்த சூழலில், நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் ஏதேனும் அறிவிப்புகள் வருமா என்ற எதிர்பார்ப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்துள்ளது. அதே நேரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 125 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்றத்தில்ல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு கிரண் ரிஜிஜு கூறுகையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அமர்வில் பட்ஜெட் விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும்.

பட்ஜெட்டை சுற்றியே விவாதங்கள்

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அளித்த பரிந்துரைகளை நாங்கள் கவனித்துள்ளோம். விதிகளின்படி, விவாதங்கள் பட்ஜெட்டைச் சுற்றி மட்டுமே இருக்க வேண்டும். இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், இந்த அமர்வின் முக்கிய கவனம் பட்ஜெட்டிலேயே இருக்கும்.

எனவே, நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படுவதை எதிர்க்கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரில், நாம் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும், கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல், குடியரசுத்தலைவர் உரைக்குப் பிறகு பகிரப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+