எம்பிக்களோடு பதறிய மோடி! பழைய நாடாளுமன்றத்தில் சரிந்து விழுந்த பாஜக எம்பி.. என்ன நடந்தது? பரபரப்பு
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று 2வது கூட்டம் நடந்து வரும் நிலையில் குழு புகைப்படத்தின்போது திடீரென பாஜக எம்பி நார்ஹரி அமின் மயங்கி விழுந்த சம்பவத்தால் பிரதமர் மோடி உள்பட எம்பிக்கள் பதறிய நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் கடைசிநாள் கூட்டம் இதுவாகும். இதையடுத்து 75 ஆண்டு கால நீண்ட வரலாறு கொண்ட பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்த விவாதம் நேற்று நடந்தது.

இதையடுத்து இன்று மதியம் 1 மணி முதல் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இனி வரும் நாட்களில் அனைத்து நாடாளுமன்ற கூட்டமும் புதிய கட்டத்தில் தான் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் தான் காலை 10 மணியளவில் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகம் வந்தார். இரு அவைகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றம் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். பழைய நாடாளுமன்ற கட்டத்துக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராஜ்யசாபா, லோக்சபா தலைவர்கள், எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுக்க முடிவு செய்யப்பட்டது.
பழைய நாடாளுமன்ற கட்டத்தின் முன்பு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி, லோக்சபா தலைவர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் பிரதமர்கள், நாடாளுமன்ற குழு தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். அதன்பிறகு எம்பிக்கள் வரிசைப்படி அமர்ந்து இருந்தோடு, நின்று கொண்டம் இருந்தனர்.
இதையடுத்து குழு போட்டோ எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் மொத்தம் 750 சேர்ந்து குழு போட்டோ எடுத்து கொண்டனர். அதேபோல் பல எம்பிக்கள் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். முன்னதாக பிரதமர் மோடியின் அருகே இருந்த பாஜக எம்பி நார்ஹரி அமின் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து எம்பிக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து உடனடியாக மீட்டனர். குடிக்க தண்ணீர் வழங்கினர். அதன்பிறகு சில நிமிடங்கள் இளைப்பாறிய அவர் மீண்டும் குழு போட்டோவுக்கு இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். தற்போது மயங்கி விழுந்த பாஜக எம்பி நார்ஹரி அமின் குஜராத்தை சேர்ந்தவர். அங்கிருந்து அவர் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2020 முதல் அவர் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications