டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று என்னென்ன மசோதாக்கள் தாக்கலாகும்.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாவது நாளான இன்று பல்வேறு முக்கிய விவாதங்கள் நடக்க உள்ளன. கேள்வி நேரத்தில் இன்று முக்கிய துறைகளுக்கு கீழ் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

2021 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகுந்த பரபரப்பிற்கு இடையில் நேற்று தொடங்கியது. முதல் நாளே பெரும் பரபரப்பிற்கு இடையே வேளாண் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. கடும் அமளிக்கு இடையே நேற்று முதல் நாள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா? Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?

நேற்று கூட்டத்தின் போது 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதால் ஒழுங்கு நடவடிக்கையாக 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சபாநாயகர்

சபாநாயகர்

இந்த 12 பேரும் இன்று மாநிலங்களவை சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்க உள்ளனர். . இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல காலமாக மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட டேட்டா பாதுகாப்பு மசோதா, கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

கேள்வி நேரம்

கேள்வி நேரம்

கேள்வி நேரத்தில் இன்று முக்கிய துறைகளுக்கு கீழ் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். முதலில் இன்று காலை மக்களவையில் டாட்ரா மற்றும் நாகர் ஹவேலி பாராளுமன்ற உறுப்பினர் டெல்கர் கலாபென் மோகன்பாய் பதவி ஏற்பார். அதன்பின் பல்வேறு ரிப்போர்ட்கள் இன்று அவையில் உறுப்பினர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும்.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பு ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்படும். அதேபோல் பல்வேறு நிலைக்குழு கமிட்டிகளின் ரிப்போர்ட் இன்று சமர்ப்பிக்கப்படும். கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நிலைக்குழு ரிப்போர்ட் இன்று அவையில் சமர்ப்பிக்கப்படும். உயர் நீதிமன்ற, உச்ச் நீதிமன்ற நீதிபதிகளின் வருமானத்தில் மாற்றம் ஏற்படும் மசோதா இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மசோதா

மசோதா


அதேபோல் குழந்தை பிறப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு, நடவடிக்கைகள் தொடர்பான மசோதா ஒன்றை இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தாக்கல் செய்வார். நேற்று அமளி காரணமாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

மாநிலங்களவை

மாநிலங்களவை


வெளிநாட்டு ஏற்றுமதி தொடர்பான 164வது நிலைக்குழு அறிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அணை பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தாக்கல் செய்வார். நேற்று அமளி காரணமாக ராஜ்ய சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

English summary
Parliament today on Winter Session; All you need to know about the 2nd day of the session
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X