எதிர்க்கட்சிகள் வெயிட்டிங்- வருது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்! டிச.2-ல் அனைத்து கட்சி கூட்டம்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவரும் சூழலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ந் தேதி கூடுகிறது. இதனை ஒட்டி டிசம்பர் 2-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றை கூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் செப்டம்பர் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. இதனால் லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுந்தது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது இந்த மசோதா. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னரே இது அமலுக்கு வரும் என்பதால் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ந் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத் தொடர் மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் குளிர்கால கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 2-ந் தேதி அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு கூட்டியுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications