Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. புயலை கிளப்பிய எதிர்க்கட்சிகள்.. இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. அவை கூடியதும் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.. குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) தொடங்கி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற 16 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் 5 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

parliament winter session delhi

முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அதேவேளையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தொழில் அதிபர் அதானி விவகாரம், மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இது போன்ற விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிபார்க்கப்பட்டது.

இன்று அவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக முதலில் லோக்சபா நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 12.00 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரம் குறித்து பதில் அளிக்க கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இன்று முழுவதும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று ராஜ்யசபாவிலும் காலையிலேயே அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தீர்மானம் கூறி முழக்கங்கள் செய்தனர். இதனால் ராஜ்யசபாவும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் தவிர வேறு எதுவுமே நடைபெறாமல் இன்று இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை அரசியல் சாசன தினம் என்பதால் இரண்டு அவையும் நளையும் கிடையாது. 75வது ஆண்டு என்பதால் அது தொடர்பான நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அரசியல் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாட உள்ளனர். இதனால் நாளை மறுநாள் தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி, வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கட்சிகளை கேட்டுக்கொண்டோம்' என்று கூறினார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ 'நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை அவைத்தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

நாங்கள் எந்த விவாதத்தையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்' என்று கூறினார். அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதனால், குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+