நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..ஜூலை 21 ல் தொடங்குகிறது.. மொத்தம் எத்தனை நாள்?
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தை எடுத்து கொண்டால் ஆண்டில் தொடக்கத்தில் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும். அதன்பிறகு மழைக்கால கூட்டத்தொடரும், ஆண்டின் இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும்.

ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது. கடந்த ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அமர்வுகளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து. ஏப்ரல் 4ம் தேதி இந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தான் இப்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும், நமக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் நம் படை வீரர்கள் பாகிஸ்தானை பந்தாடினர். பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதற்கிடையே தான் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய அரசு விவாதிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications