நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. வக்பு வாரிய திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று தொடங்குகிறது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இன்று நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி உள்ள இந்த கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நேற்று முன் தினம் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு 12 லட்சமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அமர்வுகள் தொடங்குகின்றன.
நாடாளுமன்றத்தில் இன்று வக்பு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதாவில் 14 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், கூட்டுக்குழு அறிக்கையை ஜெகதாம்பிகா பால் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தார். இந்த கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
சிறுபான்மையினர்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில்தன் இன்று வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா
வக்பு வாரிய திருத்த மசோதா கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்க்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு அமைக்கப்பட்டு மசோதா மீது ஆய்வு நடைபெற்றது.
மசோதா தொடர்பான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரையை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்தது. பாஜக கூட்டணி எம்பிக்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த கூட்டுக்குழு அறிக்கைதான் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications