ஜார்க்கண்ட் அரசியல் சலசலப்பு.. பாஜகவின் முதல்வர் முகமாக மாறுகிறாரா சம்பாய் சோரன்?
டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சம்பாய் சோரனை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது, சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், கடந்த ஆண்டு தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தொடர் சம்மன்களை அனுப்பியிருந்தது. இறுதியாக அவரை கடந்த ஜனவரி 31ம் தேதி கைதும் செய்தது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியிருந்த காலத்தில், சோரனை கைது செய்தது அம்மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தனது சுய லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சோரன் தனது கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். நீண்ட விசாரணைக்கு பின்னர், ஹேமந்த் சோரானுக்கு கடந்த ஜூன் 28ம் தேதி ஜாமீன் வழங்கியது.
ஆனால், இதற்கிடையில் ஜார்க்கண்ட முக்தி மோர்சா கட்சியில் பெரும் பூகம்பம் வெடித்திருக்கிறது. அதாவது, ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டபோது, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு பதிலாக அவரது மனைவி முதல்வராக்கப்படுவார் என்று பேச்சு அடிப்பட்டது. அப்படி செய்தால் லோக்சபா தேர்தலில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று யோசித்த கட்சி தலைமை, மூத்த தலைவரான சம்பாய் சோரனை முதல்வராக்கியது.
ஆனால், கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி முதல்வர் சம்பாய் சோரனின் அனைத்த திட்டங்களும் திட்டங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டன. அவர் ராஜினாமா செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டார். இதனையடுத்து அவர் ராஜினாமாவும் செய்தார். பின்னர் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வரானார்.
இந்த விவகாரம் சம்பாய் சோரன் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தனது x தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, “சட்டமன்றக் கூட்டத்தில் 'என் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது' என நான் கனத்த மனதுடன் சொன்னேன். இப்போது எனக்கு முன்பாக மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. முதலாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது. இரண்டாவது சொந்தமாக கட்சி நிறுவுவது. மூன்றாவது, இந்தப் பாதையில் யாரேனும் துணை இருந்தால், அவருடன் சேர்ந்து பயணிப்பது.
எனக்கு முன்பாக எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன. கட்சியில் அவமானப்படுத்தப்பட்டேன். கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அதேபோல ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது டெல்லியில் தனக்கு ஆதரவான 6 எம்எல்ஏக்களுடன் முகாமிட்டிருக்கிறார்.
அவர் மேறங்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியுடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுளளன. இந்த ஆண்டு இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சம்பாய் சோரனை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்த, அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications