நடு வானில் பரபரப்பு... திடீரென்று எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்.. பயணிகள் செம ஷாக்
டெல்லி: நடு வானத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நெருக்கடி நிலையில் வெளியேறும் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வழக்கம்போல ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டுள்ளது.

அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென்று ஒருவர், எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதைக் கண்டதும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், விமான குழுவும் சக பயணிகளும் இணைந்து அந்த பயணியைப் பிடித்துள்ளனர்.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 27, 2021 அன்று, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானம் பறந்து கொண்டிருந்த போது ஆக்ரோஷமாக விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றார்" என்று தெரிவித்துள்ளது.

பின்னர், அந்த விமானம் அவசர அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது குறித்தும் இதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications