ரயில்வே ஸ்டேஷன் போன்ற கூட்டம்.. கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் டெல்லி விமான நிலையம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஓமிக்ரான் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதால் கொரோனா சோதனை மேற்கொள்ள பயணிகள் 8 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதனால் விமான நிலையங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை கொரோனா இருந்தால் அவர்களுக்கு ஓமிக்ரான் சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

விமான நிலையம்

விமான நிலையம்

டெல்லி விமான நிலையம் குறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு ரயில்நிலையம் போல் இருக்கிறது. ஆனால் கொரோனா பரிசோதனைக்காக இத்தனை பெரிய வரிசையில் பயணிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. பிசிஆர் டெஸ்ட் எடுக்க ரூ 500 செலுத்த வேண்டும். இதற்கான முடிவுகள் வர 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அது போல் ரேபிட் கொரோனா வைரஸ் சோதனைக்கு ரூ 3500 செலவிட்டால் 2 மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்கும். இதுகுறித்து பயணிகள் கூறுகையில் கொரோனா பரிசோதனைக்காக இத்தனை கும்பலை சேர்ப்பதால் கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக விமான நிலையம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் அதிக பணம் செலவழித்தும் கண்காணிப்பு விதிமுறைகள் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன போன்ற கேள்விகளை கேட்கிறார்கள்.

மத்திய அரசு

மத்திய அரசு

சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மத்திய அரசு சொல்கிறது, ஆனால் இத்தகைய கூட்டத்தில் எப்படி பின்பற்ற முடியும்? விமான டிக்கெட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முத்திரை இருந்தும் கடந்த 24 மணி நேரமாக யாரும் போன் செய்து மேற்கொண்ட நடைமுறைகளை தெரிவிக்கவில்லை என்றனர்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    விமான நிலைய அதிகாரிகள்

    விமான நிலைய அதிகாரிகள்

    இதுகுறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் பயணிகள் ரேபிட் சோதனை அல்லது பிசிஆர் சோதனை மேற்கொள்ள விமான நிலையத்தில் 20 கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் இது போல் பதிவு செய்யும் நேரம் மிச்சமாகி, நேராக பரிசோதனைக்கு செல்லலாம் என்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+