'பெகாசஸ் ஸ்பைவேரை அரசுகளுக்கு மட்டுமே விற்க முடியும்'.. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் விளக்கம்!
டெல்லி: பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பெகாசஸ் எனப்படும் இந்த ரகசிய சாப்ட்வேர் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ(NSO) எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனை பயன்படுத்திதான் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றம் சட்டப்படுகிறது.

மத்திய அரசு மவுனம்
சில மாதங்களுக்கு முன்பே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடளுமன்றத்தின் இரு அவைகளையும் பல நாட்கள் முடக்கினார்கள். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியம். அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்
இந்த நிலையில் பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பாக இந்தியாவில் நடப்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் தலையிட விரும்பவில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் தெரிவித்தார். என்எஸ்ஓ ஒரு இஸ்ரேலிய தனியார் நிறுவனம்.. என்எஸ்ஓ அல்லது அத்தகைய நிறுவனங்களின் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் இஸ்ரேலிய அரசின் ஏற்றுமதி உரிமம் தேவை என்று நவர் கிலோன் கூறினார்.
Recommended Video

அரசு சாரா நிறுவனங்களுக்கு விற்க முடியாது
இந்த ஏற்றுமதி உரிமத்தை அரசாங்கங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே நாங்கள் வழங்குகிறோம் என்று கூறிய நவர் கிலோன் தேவைகளின் கீழ், அவர்கள் அதை அரசு சாரா நிறுவனங்களுக்கு விற்க முடியாது என்று விளக்கமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications