சேலம் பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது: யுஜிசி அறிவிப்பு
பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை நடத்துவதாகவும் அதனை விசாரிக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.
டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தொலைதூரப் படிப்பை வழங்க நான்கு அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருக்கிறது பல்கலைக்கழக மானியக்குழு. அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களிலும், அனுமதி பெறாத படிப்புகளிலும் படிப்பவர்களுக்கு இனி எந்தச் சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யுஜிசி எச்சரித்தது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 27 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தொலைதூரப் படிப்புகள் நடத்தி வருகின்றன.
சேலம், கருப்பூரில் கடந்த 1997ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ளன.
தொடக்கத்தில் தமிழகத்தில் 210 மையங்களும், பிற மாநிலங்களில் 70 மையங்களும், வெளிநாடுகளில் 6 மையங்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. தற்போது 350க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் வெளி மாநிலங்களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2014-15ம் ஆண்டு யுஜிசி மாணவர் சேர்க்கை அங்கீகாரம் வழங்கவில்லை. இந்நிலையில் 2016-17 மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக அறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்துள்ளதால், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என கடிதம் அனுப்பியது.
பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை நடத்துவதாகவும் அதனை விசாரிக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியிலான கல்வித் திட்டங்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது என்றும், ஆனால் அதன்பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவின் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த கல்வித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்றும், இது முற்றிலும் விதிமீறல்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த கல்வி ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பல்கலைக்கழக விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது எனவும், அடுத்த இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு இந்த கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு , இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும், உயர்கல்வித்துறை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
பல்கலைக்கழகத்தில்இயக்குனர் மற்றும் போதுமான பேராசிரியர்கள் இல்லை என்றும் இதனால் 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்கள் மூலமாக பெற்ற பட்டங்கள் செல்லாது என்றும் அந்த அறிக்கையில் பல்கலைக்கழக மானியக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications