ராஜஸ்தான்.. மக்களின் பிரச்சினைகளை விட்டு விட்டு.. தனி நபர் தாக்குதல்களில் குதித்த கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வசுந்தராஜி, குண்டா இருக்கீங்க, சர்ச்சையில் சிக்கிய சரத் யாதவ்-வீடியோ

    டெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முக்கியமான, மக்களின் ஜீவாதாரமான பிரச்னைகளை பற்றி பேசாமல் தனிநபர் தாக்குதல்களே அதிகம் எதிரொலித்தன.

    வாக்குச்சாவடிகளை நோக்கி சென்று அடுத்த 5 ஆண்டுக்கு யாரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கலாம் என்று மக்களின் தீர்மானம் ஒரு புறம் இருக்க.. தேர்தல் பிரச்சார களங்களில் தலைவர்களின் பேச்சுகளையும், வாக்குறுதிகளையும் பார்த்தால் தலையை சுற்றுகிறது.

    பாஜக, காங்கிரஸ் என பெரும்பாலான கட்சிகள் சாதனைகளையும், சாதிக்க போகும் செயல்களையும் முழுதாக ஓரங்கட்டி வைத்துவிட்டு தனிப்பட்ட, தரம் தாழ்ந்த பேச்சுகளை தான் முன் வைத்தன.

     முக்கியப் பிரச்சினைகள்

    முக்கியப் பிரச்சினைகள்

    அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், ரபேல் ஒப்பந்தம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ராபர்ட் வதேரா உள்ளிட்ட விவகாரங்களும் காரசாரமாக பகிரப்பட்டன. குடிநீர் வசதி, வறட்சி, வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், ஆகிய பிரச்னைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன.

     பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டம்

    பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டம்

    அடுத்தாண்டு வரவுள்ள பொதுத்தேர்தலின் முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தல் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அப்போது, இந்த தலைவர்கள் என்ன வாக்குறுதிகளை முன் வைக்க போகிறார்கள் என்றும் கருத்து கூறியுள்ளனர்.

     மாநில பிரச்சினைகள்

    மாநில பிரச்சினைகள்

    கடும் வெயில் நிலவும் மே மாத காலகட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது என்ன பேசுவார்கள், அவர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்றும் அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கம் போல மாநில பிரச்சனைகளை பேசாமல், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ப்ளாஷ் பேக்காக மனதில் நினைக்க வேண்டி இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

     தனி நபர்கள் மீது தாக்குதல்

    தனி நபர்கள் மீது தாக்குதல்

    ஆக.. ஒட்டு மொத்தத்தில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தல் திருவிழாக்களில், பெரும்பாலும் தனிநபர் மீதான தாக்குல்களே அதிகம் காணப்பட்டதாகவும், மக்கள் அவற்றை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்பதே... நடப்பு தேர்தல்கள் நமக்கு சொல்லும் சேதி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+