நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.. தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு?
டெல்லி: நாடு முழுவதும் நீண்டகாலமாக குறைக்கப்படாமலேயே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையானது 1 லிட்டருக்கு ரூ2 முதல் ரூ4 வரை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக மிக குறைவாகிவிட்ட போதிலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மலிவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட போதும் பொதுமக்களுக்காக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. தனியார் எண்ணெய் எரிபொருள் நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் அடைந்து வந்தன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டியுள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, எண்ணெய் நிறுவனங்களின் முடிவு வரவேற்புக்குரியது. இந்த முடிவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையக் கூடும். சட்டசபை தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த விலை குறைப்பு பின்னர் அமல்படுத்தப்படும் என்றார்.
இருந்த போதும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் களம், பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் நிலையில் இந்த முடிவு, வாக்காளர்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications