கொரோனா 2வது அலையால்.. பெட்ரோல் -டீசல் நுகர்வு 25% குறைவு.. ஆனால் விலையோ ஜெட் வேகம்.. முழு விவரம்!
டெல்லி: கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பெட்ரோல் -டீசல் நுகர்வு 25% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவை கடந்த 3 மாதங்களாக பாடாய்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மாநிலங்கள் வாகன இயக்கத்திற்கு கடுமையான தடைகளை விதித்து இருந்ததால் பெட்ரோல் -டீசல் மற்றும் விமான எரிபொருள் மார்ச் மாதத்திலிருந்து 25 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புள்ளிவிவரம் சொல்கிறது
மாநிலங்களுக்குள் வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக.பொருட்களை எடுத்துச் செல்ல உருவாக்கப்படும் இ-வே பில்களும் 45 சதவிகிதம் குறைந்துவிட்டன என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கலத்தால்
(பிபிஏசி)தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி,விமான எரிபொருள் நுகர்வு அதிகபட்ச வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

விமான எரிபொருள் நுகர்வு சரிவு
இந்திய விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்ததால் மார்ச் மாதத்தில் 4,75,000 மெட்ரிக் டன், ஏப்ரல் மாதத்தில் 4,13,000 மெட்ரிக் டன் மற்றும் மே மாதத்தில் 2,63,000 மெட்ரிக் டன் என்று விமான எரிபொருள் நுகர்வு அதிகபட்ச சரிவை சந்தித்துள்ளது. மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் பெட்ரோல் நுகர்வு 27 சதவீதத்திற்கும் குறைந்துள்ளது:

பெட்ரோல் நுகர்வு 27% குறைவு
மார்ச்சில் 27,40,000 மெட்ரிக் டன், 23,86,000 மெட்ரிக் டன் (ஏப்ரல்) மற்றும் 19,90,000 மெட்ரிக் டன் (மே) என்று நுகர்வு தொடர் வீழ்ச்சியை கண்டுள்ளது. டீசலை பொறுத்தவரை மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நுகர்வு 23.4 சதவீதம் குறைந்துள்ளது, இது விமான எரிபொருள் மற்றும் பெட்ரோலை விட மிகக் குறைவாகும். மார்ச் மாதத்தில் 72,24,000 மெட்ரிக் டன் , ஏப்ரல் மாதத்தில் 66,83,000 மெட்ரிக் டன் மற்றும் 55 , மே மாதம் 35,000 மெட்ரிக் டன் என டீசல் நுகர்வு குறைந்துள்ளது.

ஆனால் விலை உயர்வு
மார்ச் மாதத்தில் 1,04,39,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் நுகரப்பட்டன, இது ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்து 94,82,000 மெட்ரிக் டன்னாகவும், 25 சதவீதம் மே மாதத்தில் 77,89,000 மெட்ரிக் டன்னாகவும் இருந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நுகர்வு குறைந்தாலும் அதன் விலையோ விண்ணை மட்டும் அளவுக்கு சென்று வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications