பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. 5வது நாளாக தொடர்ந்து அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திங்களன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசாவும் டீசல் விலை 17 பைசாவும் உயர்த்தப்பட்டது. அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விலை 70 அமெரிக்க டாலரை எட்டியதால் இந்த உயர்வு ஏற்பட்டது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .75.69 ஆக உயர்ந்துள்ளது - இது 2018 நவம்பர் மாதத்திற்கு பிறகு மிகவும் அதிகமாகும்.

Petrol prices up 15 paisa, diesel by 17 paisa as crude hits $ 70 mark

கச்சா எண்ணை வளமுள்ள மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசா மற்றும் டீசல் விலை 17 பைசா அதிகரித்துள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு, ரூ .68.68 ஆக உயர்ந்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலைவாசி உயர்வை சந்தித்துள்ளது. ஈரான் தளபதியை அமெரிக்கா படுகொலை செய்த பின்னர், அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

எனவே கச்சா, எண்ணெய் விலைகள் உயர்ந்தன, தங்கம் வரலாறு காணாத விலைவாசியை சந்தித்துள்ளது. பங்குச் சந்தைகளும் திங்கள்கிழமை சரிவை சந்தித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு எதிராக "பெரும் பதிலடி" கொடுப்பதாக எச்சரித்துள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தில் இது மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+